”ஓமம், கருஞ்சீரகம், வெந்தயம்” பல நோய்கள் குணமாகுமா? உண்மை என்ன?ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் எண்ணற்ற நோய்களை நாமே விலை கொடுத்து வாங்கும் நிலை தான் இருக்கிறது.இதற்காக மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் சிலருக்கு பக்கவிளைவுகள் உண்டாகலாம்.எனவே தான் பலரும் நம் முன்னோர்கள் வழிகாட்டிய இயற்கை மருத்துவத்திற்கு திரும்புகின்றனர்.இதிலும் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூகவலைத்தளங்களில் பல இயற்கை மருந்துகளை பார்த்திருப்போம்.இதை சாப்பிடலாமா? அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும்? உண்மையிலேயே நோய்களை குணப்படுத்துமா? என்ற சந்தேகமும் பலருக்கு இருக்கும்.அதில் ஒன்று தான் வெந்தயம், கருஞ்சீரகம், ஓமம் மூன்றையும் ஒன்றாக கலந்து எடுத்துக் கொண்டால் பல நோய்களை எளிதில் சரிசெய்யும் என்பது.

இந்த பதிவில் இதன் உண்மை தன்மையை நாம் தெரிந்து கொள்ளலாம்.இதற்கு வெந்தயம்- 200 கிராம், ஓமம்- 100 கிராம், கருஞ்சீரகம்- 100 கிராம் என அனைத்தையும் லேசாக வறுத்து அரைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த பொடியை காற்று புகாத டப்பாவில் போட்டுவைக்க வேண்டும், தினமும் படுக்கச்செல்லும் முன் ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிட்டு சுடு தண்ணீர் குடித்துவிடவேண்டும், இதற்கு பின் எந்த உணவையும் எடுத்துக் கொள்ளக்கூடாது.3 மாதங்கள் தொடர்ந்து இதை சாப்பிட்டு வந்தால் பல நோய்களை குணப்படுத்துமாம்.

பயன்கள்உடலில் தேங்கியிருக்கும் நச்சுகளை வெளியேற்றும்.கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.எலும்புகள் வலுவாவதுடன் எலும்பு தேய்மானத்தை தடுக்கிறது.

பல் பிரச்சனைகளை சரிசெய்கிறது, சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்குவதால் தேகம் மினுமினுப்பாகும்.
முடி வளர்ச்சி சீராக இருக்கும், மலச்சிக்கல் பிரச்சனைகளை சரிசெய்கிறது.சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது, மாதவிடாய் பிரச்சனைகளையும் தீர்க்கும்.

இந்த மூன்று பொருட்களை மருத்துவ குணம் கொண்டது என்றாலும், நாள்பட்ட நோய்களை சரிசெய்யும் என்பதற்கான வாய்ப்புகள் இல்லை, மேலும் மருந்துகளின் பக்கவிளைவுகளையும் குணப்படுத்தாது.

அதாவது நோய்கள் வராமல் தடுக்க இதை எடுத்துக் கொள்ளலாமே தவிர, நோய்கள் முற்றிய பின்னர் இதை எடுத்துக் கொள்வதால் பலன்கள் இல்லை என்றே கூறலாம்.நம் உடலை ஆரோக்கியமாக திடகாத்திரமாக பாதுகாக்க வேண்டும் என நினைப்பவர்கள் கட்டாயம் இதனை எடுத்துக் கொள்ளலாம்.