தங்கத்தை விட மதிப்பு..அனைவரும் ஆச்சர்யப்படும் இலை.. கண்ணில் பட்டால் கண்டிப்பாக விடாதீர்கள் உன்னி இலைபொதுவாகவே நாம் அலோபதிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நம் பாரம்பர்யத்துக் கொடுப்பதில்லை. அதன் மகத்துவங்களும் நமக்குத் தெரிவதில்லை. அந்த வகையில் தான் இந்த மூலிகையையும் கழிவுச்செடியாக நினைத்து நாம் ஒதுக்கியே வைத்துவிட்டோம்.அதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். பொதுவாக இன்று கொசுத்தொல்லை இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். கொசுவை விரட்ட பலவித ஹெமிக்கல்ஸையே நாம் தேடிப் போகிறோம். இது நமது கண்கள், சருமம் மட்டுமல்லாது நுரையீரலைக் கூட பாதிக்கிறது. ஆனால் இதெல்லாம் வீணானது. சாதாரணமாக நம் வீட்டிலும், வீட்டைச் சுற்றியும் இருக்கும் மூலிகைகளைக் கொண்டே கொசுக்களை ஒழித்துவிட முடியும்.

வாருங்கள் அந்த மூலிகையைக் குறித்து தெரிந்துகொள்வோம். அந்த மூலிகையின் பெயர்தான் உன்னிசெடி. இது எல்லா சீசனிலும் வளரும். பலரும் இது வெறுமனே அழகாக மட்டும் இருக்கிறது எனவும், இதில் பயன் எதுவும் இல்லை எனவும் கழிவுச் செடியாக

நினைத்து வளர்ப்பதில்லை. நம் வீட்டின் நுழைவுப்பகுதியிலேயே இந்த உன்னிசெடியை வைக்க வேண்டும். இதில் இருந்துவரும் வாசனை கொசுக்களும் பிடிக்காது. இதனால் நம் வீட்டுப்பக்கமே கொசுக்கள் வராது.

உன்னிசெடி கிடைக்கவில்லை என்றால் அதன் உலர்ந்த இலை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை வாங்கி இலையில் நெருப்பு வைத்து வீட்டின் ஒரு மூலையில் வைக்கலாம். அதன் வாசனையால் கொசு உங்கள் வீட்டுப்பக்கமே வராது. அதேநேரம் புகை பிடிக்காதவர்களுக்கு நாட்டு மருந்து கடைகளில் உன்னி செடி சூரணம் கிடைக்கும்.

அதைவாங்கி ஏர் பிரஸ்னரில் தொங்கவிட்டாலே போதும். அதில் இருந்து வரும் வாசனையாலும் கொசு தொல்லை இருக்காது. உன்னி செடி உடலில் அடிபட்ட காயம், நாட்பட்ட புண் இருந்தாலும் குணமாக்கும். அதன் இலையை அரைத்து பத்து போட்டாலே போதும்.

இந்த இலை சொறி, சிரங்கு, படையையும் விரட்டும். இதன் பூ இனிப்பு சுவையுடையது. இந்த பூவில் டீ போட்டு குடித்தால் காசநோய் கூட போகும். சளி, நுரையீரல் பிரச்னை போவதோடு நோய் எதிர்ப்புசக்தியும் கூடும். மலேரியா, பிளட் பிரஷரும் போகும். உன்னிசெடி இலையை அரைத்துப்போட மூட்டுவலி கூட குணமாகும்.

hey