நடிகர் விஜயகாந்தை இப்படி பார்க்க மனசு வலிக்கிறது : ரசிகர்களை கண்கலங்க வைத்த புகைப்படம்தமிழ் சினிமாவில் பொதுவாக தன் சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளை மையமாக கொண்டு ஒரு கதையை உருவாக்கி சினிமா பிரபலங்களின் மூலம் வெளிபடுத்துகின்றனர்.அந்த வகையில் அரசியல் மற்றும் போலீஸ்,ஆர்மி போன்றவற்றை வைத்து மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் கதைகளை வைத்து சினிமா படங்களை உருவாகி வருகின்றனர்.அந்த வகையில் 80களில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் விஜயகாந்த் .ஊழலுக்கு எதிரான திரைகதைளும், தேசபற்று உள்ள படங்களிலும் பெரும்பாலும் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் விஜயகாந்த்.நடிகராக மட்டுமல்லாமல் நல்ல மனிதர் என்றும் மக்கள் மத்தியில் பேரெடுத்தவர், விஜயகாந்த்.இவர் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் நடிப்பிலிருந்து கொஞ்சம் விலகி, அரசியல் கட்சியை துவங்கினார்.

அரசியல் கட்சி துவங்கிய பிறகும், சில திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்த விஜயகாந்தால், திடீரென உடல்நல குறைவு காரணமாக நடிக்கமுடியாமல் போனது.

இதன்பின், தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்து வரும் விஜயகாந்த், தனது ரசிகர்களையும் தொண்டர்களையும் எப்போதாவது தான், சந்தித்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது தனது அரசியல் கட்சி வளாகத்தில் இன்று தொண்டர்களை சந்தித்து தனது புத்தாண்டு வாழ்த்துகையும் தெரிவித்துள்ளார்.

அங்கு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை விஜயகாந்தின் மகன், விஜயபிரபாகரன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் கண்கலங்குகின்றனர்.

ஏனென்றால், ஆக்ஷன் காட்சிகளிலும், புரட்சிக்காரணமான வசனங்களையும் பேசி சிங்கம் போல் இருந்த எங்கள் கேப்டனை, இப்படி பார்க்கும் பொழுது கண்கலங்குகிறது என்று ரசிகர்கள் தங்களது பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

hey