வெளிநாட்டு பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட இந்திய இளைஞர்! வைரலாகும் புகைப்படங்கள்இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் வெளிநாட்டு பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் மது சங்கீர்த். இவர் துருக்கி நாட்டில் பணியாற்றி வருகிறார். கடந்த 2016ஆம் ஆண்டு இவர் கிஜிம் என்ற பெண்ணுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.அப்பொழுது முதலில் இருவரும் நண்பர்களாக இணைந்தார்கள். இந்நிலையில் இவர்கள் அவ்வப்போது ஒன்றாக சேர்ந்து வெளியே செல்வது, ஒன்றாக நேரம் செலவிடுவது என இருந்துள்ளனர். அந்த வகையில் இருவருக்கிடையில் இருந்த நட்பு காதலாக மலர்ந்துள்ளது.பின்னர் இருவரும் குடும்பத்தார்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடத்திலும் தங்கள் காதல் விவகாரத்தை பற்றி எடுத்து கூறியுள்ளனர். இவர்கள் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

வீட்டில் பெரியவர்களிடம் சொல்லும் போது முதலில் அவர்கள் அதை மறுத்தார்கள். பின்னர் வேறு வழியில்லாமல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டனர். இதையடுத்து இருவரும் கடந்த 2019ஆம் ஆண்டு நிச்சயம் செய்து கொண்டனர்.

ஆனால் கொரோனா காரணமாக திருமணம் தள்ளி போனது பின்னர் துருக்கியில் துருக்கி முறைப்படி முதலில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் இருவரும் ஆந்திராவுக்கு வந்து தெலுங்கு முறைப்படி திருமணம் சிறப்பாக நடந்தது. இவர்கள் இந்து முறைப்படி செய்து கொண்ட திருமணத்தின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

hey