பணகஷ்டம் துரத்துகிறதா? உங்கள் வீட்டில் இருக்கும் இதுதான் காரணம்.. இதெல்லாம் இருந்தால் தூக்கி வீசிவிடுங்கள்சிலருக்கு வாழ்கையில் பணக்கஷ்டம் இருக்கும். சிலருக்கு வாழ்க்கையே பணக்கஷ்டத்தை நோக்கித் தான் சுற்றிச் சுழலும். என்னதான் மாடு மாதிரி உழைத்தாலும், கை நிறைய சம்பாதித்தாலும் சிலருக்கு பணக்கஷ்டம் மட்டும் தீராது. அதற்கு வீட்டில் இருக்கும் சில பழையப் பொருள்களே காரணம். அதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டாலே நாம் பணக்கஷ்டத்தை துரத்தி விடலாம்.அது என்ன பொருள்கள் எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள். வீட்டுக்குள் குப்பைத் தொட்டி இருப்பது எதிர்மறைத் தன்மையை உருவாக்கும். இதனால் குப்பைத் தொட்டியை வீட்டுக்குள் இல்லாமல் வீட்டுக்கு வெளியே வைக்க வேண்டும். அதேபோல் வீட்டில் ஜன்னல் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அழுக்குப் படிந்து இருக்கக் கூடாது. அப்படி இருப்பதும் எதிர்மறைத் தன்மையையே தரும்.

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என வள்ளளார் சொல்வார். அதுபோல் வீட்டில் தாவரங்கள் வாடி இருக்கக் கூடாது. இறந்து போன தாவரங்கள் அகற்றப்படாமல் இருப்பது எதிர்மறைத் தன்மையை உருவாக்கும்.

அதேபோல் வீட்டில் தண்ணீர் குழாய்களில் கசிவு இல்லாமல் இருக்க வேண்டும். அப்படி கசிவதும் நம் பொருளாதரத்தை கசிய விட்டுவிடும். இதையெல்லாம் கொஞ்சம் கவனித்தாலே நம் பணக்கஷ்டத்தை வென்றுவிடலாம்.

hey