திருமணமாகாதவர்களுக்கு வரும் 2022ம் ஆண்டு ராசிப்படி எப்படி இருக்கப்போதுன்னு தெரியுமா?ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தை நாம் மிகவும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். நாம் முன்னோக்கி செல்லும் பாதையை தீர்மானிப்பதில் நமது ராசியானது சந்தேகத்திற்கு இடமின்றி முக்கிய பங்கு வகிக்கின்றன.எனவே, திருமணமாகாதவர்கள் அல்லது இதுவரை சிங்கிளாக இருப்பவர்களுக்கு வரும் ஆண்டு எப்படி இருக்கப் போகிறது என்பதை பற்றி இங்கு நாம் பார்ப்போம் –மேஷம் மேஷ ராசிக்காரர்கள் எந்தவொரு உறவிலும் ஈடுபடும் போது சில விஷயங்கள் கடினமாக இருக்கும். ஏனெனில் அடிக்கடி சண்டைகள் வரும். வரும் 2022ம் ஆண்டு, உங்களது உறவில் சில மாற்றங்கள் ஏற்படும். இது உங்களின் வாழ்க்கையில் காதலை ஏற்படுத்தும். திருமண யோகமும் வரும் வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்ரிஷப ராசிக்காரர்கள் நீங்கள் உங்கள் வாழ்க்கை துணை அல்லது காதலை தேர்ந்தெடுப்பதற்கு இது உகந்த நேரம். அதனால் நீங்கள் எதற்கும் பயப்படாமல், உங்களுக்கு மிகவும் பிடித்த நபருடன் சுதந்திரமாக பேச, பழகுங்கள். அது நிச்சயம் காதல் அல்லது திருமண உறவுக்கு வழிவகுக்கும்.மிதுனம்மிதுனம் ராசிக்காரக்ரள், வரும் 2022ம் ஆண்டின் நடுப்பகுதியில் வாழ்க்கையில் மிகவும் சுவாரசியமான ஒருவரைச் சந்திக்கப் போகிறார்கள் என்பது உறுதி.

கடகம்கடக ராசிக்காரர்கள், ஒரு சிறப்பு வாய்ந்த உறவுடன் பழகும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இருவருக்கும் இடையே உணர்ச்சிபூர்வமான ஆதரவு இல்லாமல் போகும். உங்கள் உறவை தொடர முடியாது. எனவே, அவர்கள் உங்களை மிகவும் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவர்களுடன் நீங்கள் நேரத்தை ஒதுக்க வேண்டும்.சிம்மம்சிம்ம ராசிக்காரர்கள், வரும 2022ம் ஆண்டு, காதல் நிறைந்த ஆண்டாக இருக்காது. பல விஷயங்களை சந்திக்க வேண்டி இருக்கும். நீங்கள் உங்கள் காதல் உறவுக்காக ஏங்கவில்லை என்றால், இப்போதைக்கு தனியாக இருப்பது மிகவும் சிறந்தது.

கன்னிகன்னி ராசிக்காரர்கள், வரும் 2022ம் ஆண்டு, விசேஷமான ஒருவரைச் சந்திக்கப் போகிறீர்கள். ஆனால் அதன்பிறகு ஏற்படும் பிரச்சினைகளுக்கு உங்களை நீங்களே தயார்படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கையைப் பற்றிய உங்களது சாதாரண அணுகுமுறை உங்களின் துணையால் அதிகம் பாராட்டு கிடைக்காது.துலாம்துலாம் ராசிக்காரர்கள், வரும 2022ம் ஆண்டு, நிறைய முயற்சிகளை எடுக்க வேண்டி இருக்கும். இலக்கு சார்ந்த அணுகுமுறை மற்றும் தொழில் பாதை இலக்கு ஆகியவற்றின் அடிப்படையில் நீங்கள் உங்களுக்கு பொருந்தக்கூடிய ஒருவரை கண்டுபிடிக்க வேண்டும்.

விருச்சிகம்விருச்சிக ராசிக்கார்கள், வரும் ஆண்டு நீங்கள் சிங்கிளாக இருப்பதே சிறந்தது. ஆனால், எதிர்காலத்தில் இதே போன்ற நிலை தொடர வாய்ப்பு கிடையாது. நீங்கள் விரைவில் உணர்ச்சி மற்றும் காதல் நிறைந்த உறவில் ஈடுபடும் வாய்ப்புகள் உள்ளது.தனுசுதனுசு ராசிக்காரர்கள், எந்த உறவிலும் ஒரு பகுதியாக இல்லாதபோது உங்களுக்கான தனிப்பட்ட வாழ்க்கையை சுதந்திரமாக நீங்கள் வாழ்வீர்கள். இருப்பினும் வரும் 2022ம் ஆண்டு, ஒரு புதிய உறவு உங்களின் கதவுகளைத் தட்டக்கூடும். ஆனால் அது எல்லோருக்கும் பொருந்தாது.

மகரம்மகர ராசிக்கார்கள், 2021ம் ஆண்டு தனிமையில் இருக்கும் வரும் ஆண்டு இறுதி வரை சிங்கிளாக அப்படியே இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஏனெனில் இந்த ராசிக்காரர்களின் மனதில் வேலையும் வியாபாரமும் தொடர்ந்து ஆட்சி செய்யும். இதனால், காதல் அல்லது திருமண உறவு உண்டாவதற்கான வழிகள் கிடையாது.கும்பம்கும்ப ராசிக்கார்கள், தனிமையில் இருக்கும் நீங்கள் வரும் 2022ம் ஆண்டு கடைசி ஆண்டாக இருக்கக்கூடும. ஏனெனில் அடுத்த ஆண்டு திருமணம் ஆகிவிடும்.

மீனம்மீன ராசிக்காரர்கள் தங்கள் தொழில் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளில் ஆண்டு முழுவதும் கவனம் செலுத்துவார்கள்.

hey