தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பி ரச்சாரத்திற்கு எ துவுமில்லாமையால் இ ரா ணுவம் தொடர்பாக பேசுகின்றார்கள்: ப.உதயராசாதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பி ரச்சாரத்திற்கு எ துவுமில்லாமையால் இரா ணுவம் தொடர்பாக பேசுகின்றார்கள் என சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகமும், தமிழ் சமூக ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட முதன்மை வேட் பாளருமான ப.உதயராசா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள அவர்களது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வன்னிப் பெருநிலப்பரப்பை பொறுத்தவரையில் தொடர்ந்தும் மாற்று இனத்தைச் சார்ந்தவர்கள் அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அரசாங்கம் சார்பில் ஒரு தமிழ் அமைச்சரை உருவாக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடாது தனித்து போட்டியிடுகின்றோம்.

பல கட்சிகள் கூறுகின்ற கருத்துக்களைப் பார்க்கின்ற போது வன்னியில் 25, 30 பாராளுமன்ற உறுப்பினர்களை உள்வாங்கினால் தான் எல்லோரும் வெல்ல முடியும். பலர் போ ட்டியிடுகிறார்கள். தீர்மானிப்பது மக்கள். தேர்தல் எனக்கு பு திதல்ல. கடந்த முறை போ ட்டியிட்டு சொற்ப வாக்குகளால் தோ ல்வியடைந்தேன்.

எம்மோடு எமது கட்சியில் போட்டியிடுபவர்கள் அனைவரும் நல்ல வே ட்பாளர்கள். அதனால் நாங்கள் க ண்டி ப்பாக வெற்றி பெறுவோம். நாம் பாரிய வாக்கினை பெற முடியும். ஆனால் மற்றவர்கள் போல் எத்தனை ஆசனம் எடுப்போம் என கூற விரும்பவில்லை. எமது கட்சியில் யார் வென்றாலும் ஏற்றுக் கொள்வோம்.

வெல்லக் கூடிய மற்றக் கட்சிகள் கூட தங்களது விருப்பு எண்களை தான் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அவர்களுக்குள் போட்டி இருக்கிறது. நாம் அபிவிருத்திக்காக ஒரு சந்தர்ப்பத்தை கோருகின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட இன்று தேசியத்துடன் அபிவிருத்தி என்று கூறுகிறார்கள்.

முன்னர் அபிவிருத்தி என்பதை பி ழையான க ண்ணோ ட்டத்துடன் சித்தரித்தார்கள். அபிவிருத்தியைப் பற்றி பேசுபவர்கள் தமிழர்களா என்று கேள்வி எழுப்பினார்கள். தற்போது தேசியத்தையும், எமது உரிமையுடன் கலந்த அபிவிருத்தியையும் பெற வாக்களிக்குமாறு கோ ருகிறார்கள். நாங்கள் க ளவெ டுத்து தரும் அ பிவிருத்தியையா சொன்னோம். நாமும் அதை தானே சொல்கின்றோம்.

படித்த இளைஞர், யுவதிகள் பலர் வே லைவாய்ப்பின்றி இருக்கிறார்கள். தனித்துவத்துவமாக அரசுடன் இணைந்து அதனைப் பெற்றுக் கொ டுக்போம். எங்களுக்கான முழு அபிவிருத்தியையும் பெறுவோம். மக்களுக்கு பி ரச்சனை என காட்டுகின்ற பல தலைமைகளை நாம் நேரடியாக பார்க்கின்றோம்.

2009 ஆம் ஆண்டு யு த் தம் மு டி வடைந்த பின்பு அதில் அந்த யுத்தத்தில் தலைமை தாங்கிய இ ரா ணுவத் தளபதி சரத்பொன்சேகா அவர்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கியிருந்தார்கள். அவரை ஜனாதிபதியாக ஆக்கியிருந்தால் இன்று இருக்கக் கூடிய நிலமையை விட பாரிய அளவில் இ ராணு வத்தின் க ட்டுப்பாட்டிற்குள் நாடே இருந்திருக்கும்.

அதன் பிறகு இரா ணுவத்தில் இருந்தவர் வடக்கு ஆளுனராக இருக்கிறார் என கூட்டமைப்பினர் கூ ச்ச லிட்டார்கள். இன்று உள்ள சோ தனை ச் சா வடிகள் கொ ரோ னாவிற்காக உருவாக்கப்பட்டவை. இலங்கையின் பல பிரதேசங்களிலும் அது இருக்கிறது. இதனை நல்லம் என்று ஏற்றுக் கொ ள்ளவில்லை. இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரத்திற்கு எதுவுமி ல்லா மையால் இ ரா ணுவம் கெ டுபி டி என கூறுகிறார்கள். அரசாங்கத்தில் குறை சொல்வதே அவர்களது வழமை. இ ரா ணு வத்தால் தே ர்தல் பா திக் கப்பட போ றது இ ல்லை. அவை பாதுகாப்பிற்காகவே எனத் தெரிவித்தார்.

hey