பிரபல இசையமைப்பாளர் டி.இமான் அவரது மனைவியை விவாகரத்து செய்து விட்டாரா..? இணையத்தில் வெளியாகிய தகவலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்தமிழ் சினிமாவில் பல புதுமுக இசையமைப்பாளர்கள் வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இன்னும் முன்னணி இசையமைப்பாளர்கள் மாஸ் காட்டி வருகிறார்கள். எத்தனை புதுப்புது இசையமைப்பாளர்கள் வந்தாலும் அவர்களுக்கு இணையாக இன்றைய சினிமாவிற்கு ஏற்றவாறு திரைபடங்களுக்கு சற்றும் சலிக்காதவாறு இசை அமைத்து தமிழ் சினிமாவை கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் தமிழில் பிரபலமான இசையமைப்பாளர்களில் இமான் ஒருவர்.விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் இசையமளிப்பாளராக அறிமுகமான இமான் அதன் பின்னர் தமிழில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்து உள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் விஜய் அஜித் துவங்கி சிவகார்த்திகேயன் என்று பலர் பாடங்களுக்கு இமான் இசையமைத்து உள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி.இமான். அவரது இசையில் கடைசியாக வெளியாகி இருந்த திரைப்படம் ரஜினியின் அண்ணாத்த.

படம் வெற்றியடைய படக்குழுவினரை அழைத்து தங்க செயின் பரிசளித்து தனது மகிழ்ச்சியை ரஜினி வெளிப்படுத்த இமான் அதை ரசிகர்களுக்கும் கூறி மகிழ்ச்சியடைந்தார்.

இப்படி சூப்பர் சந்தோஷ செய்தியை கடைசியாக வெளியிட்ட டி.இமான் இப்போது ஒரு சோக செய்தியை கூறியுள்ளார். அதுஎன்னவென்றால் அவரும் அவரது

மனைவி மௌனிகாவும் கடந்த நவம்பர் மாதம் விவாகரத்து பெற்றுவிட்டார்களாம்.இதனை அவரே தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். 2008ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இமானிற்கு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

hey