வருகின்ற வருடம் ஜனவரி மாதத்தில் உருவாகும் திரிகிரன யோகத்தால் இந்த 5 இராசி காரர்கள் அதிகமா சங்கடப்பட போறார்களாம்..? உங்க இராசி இருக்கானு பாருங்க2022 புத்தாண்டு வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன.புதிய ஆண்டில் நுழையும் போது நம்மில் பலரது மனதில் புதிய நம்பிக்கைகள் உருவாக ஆரம்பிக்கும்.அதோடு பலருக்கு எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலும் இருக்கும்.இதற்கு ஜோதிடம் பெரிதும் உதவி புரியும்.ஜோதிடத்தைப் பொறுத்தவரை,வரவிருக்கும் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 5 ராசிக்காரர்கள் அதிக கஷ்டத்தை சந்திக்கப்போகிறார்கள்.ஏனெனில் 2022 ஆம் ஆண்டில் சனி பகவான் ஆளும் மகர ராசியில் திரிகிரக யோகம் உருவாகிறது.சனி ஏற்கனவே மகரத்தில் உள்ளார்.ஜனவரி 5 ஆம் தேதி புதனும் மகரத்திற்கு சென்றுவிடுவார். அதைத் தொடர்ந்த ஜனவரி 14 ஆம் தேதி சூரியனும் மகர ராசிக்கு சென்று விடுவார்.

இப்படி மகர ராசியில் சனி, சூரியன் மற்றும் புன் ஆகிய கிரகங்கள் ஒன்றிணைந்து இருக்கும் போது திரிகிரக யோகம் உருவாகிறது.இந்த யோகம் சுபமானது அல்ல.இந்த யோகத்தால் பின்வரும் 5 ராசிக்காரர்கள் அதிக சிரமத்தை அனுபவிக்கப் போகிறார்கள்.அந்த ராசிக்காரர்கள் யார்யார், உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கடகம் திரிகிரக யோகத்தால் கடக ராசிக்காரர்கள் இக்காலத்தில் சவால்களை சந்திக்க நேரிடும்.உங்களின் எதிரிகள் உங்களின் பெயரைக் கெடுக்க முயற்சிப்பார்கள்.இது உங்கள் தொழிலை பாதிக்கும்.அலுவலகத்தில் உங்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்காது. இதனால், நீங்கள் மன உளைச்சலால் அவதிப்படக்கூடும்.

கன்னி கன்னி ராசிக்காரர்கள் திரிகிரக யோகம் உருவாகியுள்ள காலத்தில் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.வயிறு தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும்.ஆகவே உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, ஹோட்டல் உணவுகள் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

துலாம் திரிகிரக யோகத்தால் துலாம் ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.மன அழுத்தம் அதிகரிக்கும்.அடிக்கடி மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருக்கும். தொண்டை, மார்பு மற்றும் முதுகு வலி பிரச்சனைகளால் அதிகம் கஷ்டப்படுவார்கள்.

தனுசு தனுசு ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதத்தில் கஷ்டங்கள் அதிகமாக இருக்கலாம். திருமண வாழ்க்கையில் குழப்பமான சூழ்நிலை உருவாகலாம்.வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் அல்லது மோதல் காரணமாக உங்களின் மனநிலை மோசமாக இருக்கும். முக்கியமாக உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மகரம் மகர ராசிக்காரர்கள் இக்காலத்தில் எதையும் செய்து முடிப்பதற்கு பல மடங்கு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.செலவுகள் அதிகரிக்கும்.இதனால் நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும்.மேலும் ஆரோக்கிய பிரச்சனையை சந்திக்க நேரிடும் என்பதால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனத்தை செலுத்துங்கள்.

hey