சிவகார்த்திகேயன் நல்ல மனுஷன்யா.. RRR விழாவில் நடந்த சம்பவம்! வீடியோ வைரல்ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் பட விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். அந்த படம் ஜனவரி 7ம் தேதி ரிலீஸ் ஆகா உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அதை விளம்பரப்படுத்த இந்த விழா நடத்தப்பட்டது.

மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் தான் ராஜமௌலியின் எவ்வளவு பெரிய ரசிகன் என கூறினார். தான் நடிக்க வந்த புதிதில் நான் ஈ படம் ரிலீஸ் ஆகி இருந்தது,ஈயை வைத்தே படம் எடுக்கிறார்கள் என்னை வைத்து எடுக்கமாட்டார்களா என எனக்கு தோன்றியது என சிவகார்த்திகேயன் கூறி இருக்கிறார்.

“ஆர்ஆர்ஆர் வருது, அது பின்னாடியே வலிமை வருது.. அடுத்த வருட துவக்கமே பயங்கரமாக இருக்க போகிறது. இந்த படங்கள் எல்லாம் ஓடி மக்கள் தியேட்டருக்கு வர தொடங்கினால் தான் அடுத்து வரும் என் படம் ஓடும். அப்படி ஒரு சுயநலமும் அதில் இருக்கிறது” என சிவகார்த்திகேயன் பேசி இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் பேசியது ஒரு புறம் இருக்க அவர் கீழே ராஜமௌலிக்கு அருகில் அமர்ந்து இருக்கும்போது மேடையில் தொகுப்பாளர் விஜய் இசை கலைஞரை மறைத்தபடி மேடையில் நின்றிருந்தார்.

அதை கவனித்த சிவகார்த்திகேயன் அதை சுட்டி காட்டி அவரது தள்ளி நிற்க வைத்தார்.அதன் பின் இசை கலைஞர்களுக்கும் தொகுப்பாளர் பாராட்டு தெரிவித்து பேசினார். சிவகாரத்திகேயன் இப்படி செய்ததற்கு பாராட்டு கிடைத்து வருகிறது.

hey