சீக்ரெட்டாக நடந்த சந்திப்பு, அக்ஷரா மற்றும் வருண் யாருடன் உள்ளார்கள் பாருங்க



தென்னிந்திய தொலைக்காட்சிகளில் வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகள் தான் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அதுவும் அதில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் ஹிந்தியில் ஆரம்பித்து தற்போது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் வெற்றிக்கரமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது எனலாம். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தமிழில் வெளியாகி தமிழ் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.அந்த வகையில் தற்போது இந்த நிகழ்ச்சி நான்கு சீசன்களை கடந்து ஐந்தாவது சீசனில் வெற்றிக்கரமாக அடியெடுத்து வைத்துள்ளது.

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 5, தற்போது இறுதி போட்டியை நெருங்கி வருகிறது.

அந்த வகையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் டிக்கெட் டு பைனல் டாஸ்க் நடந்து வருகிறது, இதில் வெற்றி பெற்று யார் முதலில் இறுதி போட்டிக்கு செல்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து கமல் இரண்டு முக்கிய போட்டியாளர்களை வெளியேற்றி இருந்தார். அதுவும் வருண் மற்றும் அக்ஷரா ஒரே நேரத்தில் வெளியேறியது இந்த சீசனின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்டது.

இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அக்ஷரா மற்றும் வருண் முக்கிய நபர்களை சந்தித்துள்ளனர். ஆம் அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முன்னதாக

வெளியேறிய போட்டியாளர்களை தான் அவர்கள் சந்தித்துள்ளனர்.அப்போது எடுக்கட்டப்பட்ட புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த போட்டோஸ்

hey