பிக் பாஸுக்கு பின் வீட்டை இழந்த சினேகன்… 13 நாள் ஹோட்டலில் தங்கிய அவலம்! தீயாய் பரவும் வீடியோபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வீட்டை இழந்து 13 நாள் ஹோட்டலில் தங்கிய அவலம் பிக் பாஸ் புகழ் சினேகனுக்கு நடந்துள்ளது. அண்மையில் அவர் நேர்காணல் ஒன்றில் இது குறித்து குறிப்பிட்டுள்ளார்.அதில் அவர் கூறி இருப்பது,எனக்கு ஏ.ஆர்.ரகுமான் சாருடன் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என்று ரொம்ப வருடமாக ஆசை. அதாவது 15 வருடமாக நான் காத்துக்கொண்டிருந்தேன். அந்த வாய்ப்பு தற்போது தான் கிடைத்தது.நான் அவருடன் சேர்ந்து பணியாற்றி இருக்கிறேன். அதை அவர்களே அறிவிப்பதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.மேலும், 15 வருடமாக காத்துக்கொண்டிருந்த என்னுடைய எதிர்பார்ப்பு 15 நிமிடத்திலேயே முடிந்துவிட்டது. அவர் துபாயில் இருந்தார். அதனால் இங்கிருந்தே ஜூம் மீட்டிங்கில் நாங்கள் பேசினோம்.

அப்போது அவர் இரண்டு வரிகளை சொல்லுங்கள் என்று கேட்டார். பின் அதற்கேற்ற மாதிரி மெட்டு போட்டார். அவர் அப்படியே 15 நிமிடத்திலேயே பாட்டை முடிந்துவிட்டார். இவ்வளவுதானா முடிஞ்சிடுச்சா? என்று நான் நினைத்தேன்.

அந்த தருணங்களை மறக்க முடியாது. அதே போல் நான் என் வாழ்க்கையில் அடிபட்டேன் என்பதை விட இன்னும் அடிபட்டுக் கொண்டு தான் இருக்கிறேன்.என் நண்பர்களும், என்னை சுற்றி இருப்பவர்களாலும் நான் நிறைய ஏமார்ந்து இருக்கிறேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் நண்பர்களால் நான் ஏமாற்றப்பட்டு இருக்கிறேன்.

தொழிலில் எல்லாம் நான் ஓடிப் பிடித்து சாதித்து விடுவேன். சாவுற வரைக்கும் என்னுடைய தொழிலை விட மாட்டேன். ஆனால், நட்பால் நான் நிறைய துரோகம் சந்தித்து இருக்கிறேன்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து நான் வெளியே வந்த பிறகு என்னுடைய ரெண்டு வீடு, கார் என எதுவும் இல்லை. என் நண்பன் செய்த துரோகத்தால் எல்லாமே இழந்தேன்.

13 நாள் நான் வீட்டுக்குள் போக முடியாத அளவுக்கு ஹோட்டலில் தங்கி இருந்தேன். ஆனால், அவர்கள் மீது நான் எந்த ஒரு சட்ட ரீதியாக புகார் எடுக்கவில்லை. மறுபடியும் நான் அதே மாதிரி புது கார், வாங்கி அதே வீட்டுக்குள் போனேன் என்றார்.

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

hey