காரை பார்த்தல் காசை மறந்துவிடும் தனுஷ் – இதுவரை அவரது கையில் இருக்கும் விலையுர்ந்த கார்களின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா.?தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக தனது பயணத்தை தொடர்ந்து இருந்தாலும் அதன் பின் தன்னை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத அளவிற்கு தன்னை மாற்றிக் கொண்டவர் நடிகர் தனுஷ். இப்போ இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மையை வைத்துக் கொண்டு வலம் வருகிறார்.இவரது நடிப்பில் தற்போது சிறப்பாக இருக்கின்ற காரணத்தினால் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து மொழிகளிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார். இப்ப கூட தமிழில்

நடிகர் தனுஷ் அவரது அண்ணன் செல்வராகவன் உடன் கைகோர்த்து நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இது இப்படியிருக்க தெலுங்கு சினிமாவிலும் நடிக்க இருக்கிறார் அந்த படத்திற்கு “வாத்தி” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் நடிகர் தனுஷ். சினிமாவுலகில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருந்தாலும் நடிகர் தனுஷும் சினிமாவையும் தாண்டி சொகுசு கார்கள் மீது அவ்வளவு பெரிய ஆசை. அந்த காரணத்தினால் தான் விலை உயர்ந்த கார்களை வாங்கி கொண்டே வருகிறார்.

தனுஷ் வச்சி இருக்கிறதிலேயே மிகவும் விலை உயர்ந்த கார்களில் ஒன்று ரோல்ஸ்ராய்ஸ் கார் இந்த காரின் மதிப்பு சுமார் 7 கோடி ஆகும். இந்த காரை தொடர்ந்து அவரிடம் பென்ட்லி கான்டினென்டல் பிளேயிங் ஸ்பர் W12 மாடலிங் காரை வைத்துள்ளார் இந்த காரின் மதிப்பு 3.40 கோடி ஆகும். இதனைத் தொடர்ந்து தனுஷ் ஆடி 8 காரை வைத்திருக்கிறார்.

இதன் மதிப்பு சுமார் 1.60 கோடி இந்த காரை தான் பெரிதும் நிகழ்ச்சி மற்றும் சினிமா ஆகிய இடங்களுக்கு பயன்படுத்தி வருகிறார். தனுஷ் வைத்து இருக்கிறதிலேயே

மிக குறைந்த விலை உயர்ந்த கார்களில் ஒன்று ஜாகுவார் எஃப் எஸ் சி ஆகும் இதன் மதிப்பு சுமார் 40 லட்சம் மட்டுமே.. எப்பொழுதும் விலையுயர்ந்த கார்களை வாங்க அதிகம் ஆசைப்படும் நடிகர்களில் ஒருவர் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

hey