பிரபல நடிகையின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட பிக் பாஸ் லாஸ்லியா! யாருடன் பாருங்கதற்போது வெள்ளத்திரையில் நடிப்பவர்களை காட்டிலும் சின்னத்திரையில் நடிப்பவர்களை மக்களிடையே மிகவும் பிரபலமடைகிறார்கள்.இந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக நான்காவது சீசனைத்தாண்டி ஐந்தாவது சீசனில் கால்தடம் பதிக்கிறது. இந்த நிகழ்ச்சி யாரெனத்தெரியாமல் இருக்கும் பல புது முகங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வாய்ப்பளிப்பது மட்டுமில்லாமல் மக்களிடையே அவர்களை அடையாளம் காட்டி வருகிறது. இதன் மூலம் அவர்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமில்லாமல் வெள்ளித்திரையில் அவர்களை நடிகர்களாக மாற்றியுள்ளது.பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்ட தர்ஷன்,முகேன்,மீராமிதுன்,சாக்சி,அபிராமி என அனைவரும் புதுமுகங்களாக கலந்து கொண்டவர்களாக இப்போது மக்களிடையே மற்றும் படங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றனர்.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.இதன்முலம் கிடைத்த படங்களின் வாய்ப்பை பயன்படுத்தி தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகையாகியுள்ளார்.

இவருடைய முதல் படமாக Friendship அமைந்தது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்திருந்தார். இதுமட்மின்றி, ஆக்ஷன் கிங் அர்ஜுன் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தை தொடர்ந்து தற்போது கே.எஸ். ரவிக்குமார் தயாரித்து, நடித்து வரும் கூகுள் குட்டப்பா படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் லாஸ்லியா.

இந்நிலையில் தற்போது முக்கிய நடிகையின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார் நடிகை லாஸ்லியா. ஆம், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் மற்றுமொரு நடிகையாக

அதுல்யா சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.அதில் லாஸ்லியாவும் மற்ற நடிகைகளுடன் கலந்து கொண்டுள்ளார். இதோ அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

hey