பிரபல நகைச்சுவை நடிகர் கஜேந்திரனின் தற்போதைய நிலை என்ன தெரியுமா..? வெளியான தகவலால் வியப்பில் ரசிகர்கள்சிறிய பட்ஜெட் படங்களின் மூலம் தன் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர் தான் டிபி கஜேந்திரன்.1955ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்துள்ளார் இவர் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்துள்ளார் பிறகு இவரது படம் பெரிதும் அடையாளம் காணாமல் இருந்த போது ஒரு படத்தில் சிறு வேடத்தில் காமெடி நடிகராக அறிமுகமாகிறார்.பின்பு இவரது எதார்த்தமான காமெடி போன்ற கலகலப்புடன் இருக்கும் கதாபாத்திரத்தை பார்த்த ரசிகர்களுக்கு தன்னுடைய நடிப்பின் மூலம்.எக்கச்சக்க திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை தமிழ்சினிமாவில் பிடித்துக் கொண்டவர்.இவர் எம் ஆர் பெருமாளின் மகனான முந்தைய நடிகை டி பி முத்துலட்சுமியின் மைத்துனர் ஆவார்.

ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என சினிமாவில் பல துறைகளிலும் கோலோச்சும் பலர் இருக்கிறார்கள். அவர்களில் சிலரை, சிலருக்குத் தான் பிடிக்கும். ஆனால் அனைவருக்கும் பிடித்தவர்கள் என்றால் அது காமெடி நடிகர்கள்தான்!

அந்தவகையில் குள்ளமான தோற்றத்தில் கலக்கும் கஜேந்திரனின் காமெடிகள் வேற லெவல் என்றே சொல்லிவிடலாம். இவர் காமெடி நடிகர் மட்டுமல்ல. இயக்குனரும் கூட

தூத்துக்குடி மாவட்டம் தான் இவரது சொந்த ஊர். 1955 ஆம் ஆண்டு பிறந்த இவர் இயக்குனராக மார்க்கெட் இழந்த நேரத்தில் தான் காமெடி ரோல்களில் நடிக்கத் தொடங்கினார்.

இவர் பழைய நடிகை டி.பி.முத்துலெட்சுமியின் மைத்தனரும் ஆவார். பிரபுவை வைத்து இவர் எடுத்த பட்ஜெட் பத்மநாபன் பெரிய அளவில் ஹிட் அடித்தது. 2001 ஆம் ஆண்டு ஒரு பக்தி படத்தை எடுக்க பூஜை போட்டார். ஆனால் அந்தப்படம் பாதியிலேயே ட்ராப் ஆகிவிட்டது.

அதன்பின்பு காமெடி ரோலில் மட்டும் தலைகாட்டினார் கஜேந்திரன். தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு சினிமா தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்கத்தின் தலைவராக பொறுப்பு ஏற்றார்.

கொ ரோனாவுக்குப் பின்பு படவாய்ப்புகளே இல்லாமல் தவிக்கிறார் கஜேந்திரன். பலருக்கும் தெரியாத இவர் பற்றிய ஒரு ரகசியம் இருக்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இவரும் வகுப்புத் தோழர்கள் ஆவார்கள். அண்மையில் இருவரும் சந்தித்தும் கொண்டனர்.

hey