அட நம்ம ஸ்ருதிஹாசனா இது, 20 வயதில் எப்படி இருந்துள்ளார் பாருங்க- அவரே வெளியிட்ட புகைப்படம்தென்னிந்திய சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்களின் மகன் மற்றும் மகள்களும் தற்போது திரைத்துறையில் நடிகர் நடிகைகளாக வலம் வந்த வண்ணம் உள்ளனர். இந்த வகையில் சினிமாத்துறையில் பல வருடங்களாக முன்னனி நடிகராக இருப்பவர் உலகநாயகன் கமலஹாசன்.இவருக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சரா ஹாசன் என இரு மகள்கள் உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இவர்கள் இருவரும் திரைத்துறையில் கதாநாயகிகளாக உள்ள போதிலும் ஸ்ருதிஹசனையே அனைவருக்கும் நன்கு தெரியும். ஸ்ருதிஹாசன்

\

சூர்யா நடிப்பல் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இருப்பினும் ஸ்ருதிஹாசன் குழந்தையாக இருக்கும்போதே பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

நடிகைகள் இன்ஸ்டா பக்கங்களில் அதிகம் ஆக்டீவாக இருக்கிறார்கள். அதிலும் நடிகை ஸ்ருதஹாசன் எப்போதும் ஏதாவது ஒரு புகைப்படம் பதிவு செய்த வண்ணம் இருப்பார்.

கடந்த சில நாட்களுக்கு முன் அவர் இசைப்பள்ளியில் பயின்ற போது அதாவது அவரது 20வது வயதில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

தனது இசை படிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் வேறொரு இடத்திற்கு சென்று பயின்று நிறைய நண்பர்களை சம்பாதித்தது சந்தோஷம் என்றும் பதிவு செய்திருக்கிறார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் 20வது வயதிலும் ஸ்ருதிஹாசன் செம ஸ்டைலாக இருக்கிறார், சூப்பர் புகைப்படம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

hey