விவாகரத்து வதந்தி மத்தியில் செம்பருத்தி ஷபானாவிடம் இருந்து இப்படி ஒரு பதிவா? குழப்பத்தில் ரசிகர்கள்விவாகரத்து வதந்தி மத்தியில் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா வெளியிட்ட பதிவு ஒன்று ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சியில்கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கிய செம்பருத்தி சீரியல் இன்று வரை சூப்பர் ஹிட் சீரியலாக ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் நடிகை ஷபானா, பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு என்று சோசியல் மீடியாவில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஷபானாவும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆரியனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில் இவர்களது திருமண புகைப்படங்கள் வைரலாகின. ஆனால் இவர்களது திருமணத்தில் ஆர்யன் வீட்டாருக்கு சிறிது கூட விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே இருவருக்கும் விவாகரத்து என்பது போன்ற வதந்திகள் வெளியாகி வருகின்றன. இதனிடையே ஷபானா மீண்டும் இன்ஸ்டாகிராமில்

ஒரு புகைப்படத்துடன் சிறு புன்னகை, கொஞ்சம் சந்தோஷம், ஒரு சின்ன நிலவு, கனவுகளின் ஓலைகளுடன், ஒரு வீட்டை கட்டுவோம் என்று பதிவிட்டுள்ளார்.

ஷபானா-ஆர்யன் உண்மையாக மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா அல்லது இது சீரியலுக்காக எடுக்கப்பட்ட புகைப்படமா என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

hey