வனிதாவின் டான்ஸ் போட்டோ வைரல்.. சமந்தாவுக்கே டப் கொடுப்பாரோ..?தமிழ் சினிமாவை பொறுத்த வரை நடிகர் ,நடிகைகுள் காதல் வருவது ஒன்றும் புதிது அல்ல .அப்படி காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் சில வருடங்களுக்கு பிறகு சில கருத்து வேற்பாடு காரணமாக பிரிந்து விடுகின்றனர்.அந்த வகையில் மூன்றுமுறை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்று தற்போது நான்காவது திருமணம் செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. அந்த வகையில் சந்திரலேகா என்ற திரை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் வனிதா விஜயகுமார். இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளும் ஆவார். இவர் தமிழ் ,தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.இவர் ஆரம்ப காலத்தில் இருந்தே பல சர்ச்சைகளில் சிக்கிய வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று பலர் வெறுப்புகளையும் சம்பாதித்தார்.

வனிதா விஜயகுமார் என்றால் எப்போதும் அவரை சுற்றி உலா வரும் சர்ச்சைகள் தான் நினைவுக்கு வரும். பிக் பாஸ் ஷோவுக்குள் அவர் சென்ற போது தொடங்கிய சர்ச்சை, அதன் பின்

பீட்டர் பால் திருமண சர்ச்சை, பவர் ஸ்டார் உடன் திருமண கோலத்தில் இருந்த போட்டோ வைரல் ஆனது என பல பிரச்சனைகள் அவரை பற்றி மிகவும் பரபரப்பாக பேச வைத்திருக்கிறது.

தற்போது பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார் வனிதா விஜயகுமார். பவர் ஸ்டார் உடன் அவர் திருமண கோலத்தில் இருந்த போட்டோ பிக்கப் டிராப் என்ற படத்தின் போட்டோஷூட் என்பது பின்னர் தான் தெரியவந்தது.

இந்நிலையில் தற்போது வனிதா காத்து என்ற படத்திற்காக ஐட்டம் பாடல் ஆடி இருக்கிறார். ஐட்டம் பாடலுக்கான உடை மட்டும் மேக்கப்பில் அவர் இருக்கும் புகைப்படத்தை தற்போது வெளியிட்டு உள்ளார். அது தற்போது வைரல் ஆகிறது.

சமீபத்தில் சமந்தா புஷ்பா படத்தில் ஆடிய ஐட்டம் டான்ஸ் பெரிய ஹிட் ஆகி இருக்கும் நிலையில், வனிதா அவருக்கு போட்டியாக வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

hey