மாகாபா ஆனந்தை பார்க்க சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்.. நெகிழ்ச்சியான தருணம்வெள்ளித்திரை காட்டிலும் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்று வருகிறது .விஜய் தொலைகாட்சியின் மூலம் பல தொகுப்பாளர்கல் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்து வருகின்றனர் .அந்த வகையில் ரேடியோ ஜாக்கி, தொகுப்பாளர், மற்றும் நடிகர் என பன்முகம் திறமை கொண்டவர் மாகாபா ஆனந்த். இவர் நிகழ்ச்சிகளை வித்தியாசமாகவும், காமெடியாகவும் அவர் தொகுத்து வழங்கி வரும் விதம் மக்களை கவர்ந்து சின்னிதிரையில் இவருக்கென்ன தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.இவர் சூப்பர் சிங்கர், அது இது எது, கிங்க்ஸ் ஆப் டான்ஸ் , கலக்கு போவது யாரு, போன்ற எண்ணற்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். விஜய் டிவில் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற கரணம் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஆங்கர் என்று சொல்லலாம் .

இவ்வாறு சின்னத்திரையில் ஒரகலக்கு கலக்கிய இவர், வெள்ளித்திரையில் வானவராயன் வல்லவராயன் என்ற படத்தின் மூலம் அறிமுகம் மானார் . இதனை தொடர்ந்து கடலை, மீசைய முறுக்கு ,பஞ்சு மிட்டாய் , மற்றும் இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்த சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதனுடைய ஜூனியர் 8வது சீசன் சமீபத்தில் தான் துவங்கியது.கடந்த வாரம் பிரம்மாண்டமாக துவங்கிய, சூப்பர் சிங்கர் சீசன் 8ல் போட்டியாளர்களாக சின்னசிரிய பல குழந்தைகள் கலந்துகொண்டனர்.

இந்த சூப்பர் சிங்கர் சீசன் 8ன் நடுவர்களாக பின்னணி பாடகர்கள் சித்ரா, சங்கர் மகாதேவன், கல்பனா மற்றும் எஸ்.பி சரண் ஆகியோர் உள்ளனர்.இதில் சித்ரா மற்றும் எஸ்.பி சரண் ஒரு அணியாகவும், கல்பனா மற்றும் சங்கர் மகாதேவன் மற்றொரு அணியாகவும் பிரிந்து தங்களது அணி போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கவுள்ளனர்.

துவக்க நிகழ்ச்சியை தொடர்ந்து இந்த வாரம் செலக்ஷன் சுற்று நடைபெறவுள்ளது. இதில் பாடிய ஒரு போட்டியாளர், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வர காரணமே மாகாபா ஆனந்தை பார்க்க தானாம்.

இதனால் மாகாபாவும் சற்று நெகிழ்ந்துவிட்டார். இதனை தற்போது வெளியாகியுள்ள சூப்பர் சிங்கர் ப்ரோமோவில் தெரிவித்துள்ளனர். இதோ அந்த ப்ரோமோ வீடியோ

hey