அடேங்கப்பா சுப்ரமணியபுரம் மொக்கசாமி நிஜத்தில் இப்படியொரு வியாபாரம் செய்பவரா!! இப்போ எப்படி இருக்கார் பாருங்கதமிழ் சினிமாவில் எப்போதுமே கொண்டாடப்படும் ஒரு சில படங்களில் முக்கியமானபடம் சுப்ரமணியபுரம். கிட்டத்தட்ட அந்த படம் ரிலீஸ் ஆகி 13 வருடங்கள் ஆனாலுமே இன்றுமே அந்த படத்தினை முழுவதுமாக பார்க்கும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். மேலும் இன்றுமே சமூக வளைதலங்களில் இந்த படத்திற்காக ட்ரென்ட் செய்து வந்தனர்.இந்த நிலையில் இப்படத்தில் மொக்க சாமி என்ற ஊர் பெரிய மனுஷனாக நடித்தவரின் விவரம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.திருவிழா முடியுற விரிக்கும் சுத்தபத்தமாக இருக்க வேண்டும் என்று கூறி ஒரே டயலாக்கில் மொத்த மக்களிடையேயும் பேமஸ் ஆகிவிட்டார். யார் இவர் ? இவருக்கு எப்படி இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்தது ? இவருடைய பெயர் முருகன், மதுரை மாட்டுத்தாவனி பகுதியில் உள்ள மார்க்கட்டில் இலை கடை வைத்து நடத்தி வருபவர்.இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

இந்த படத்திற்காக படபிடிப்பு இடத்தினை தேடி கொண்டு இருந்த சசிகுமார் மதுரை மார்கெட்டிற்கு வந்து சுற்றி திரிந்து இருகின்றனர். அப்போது அந்த மார்கெட்டில் தான் சுற்றி சுற்றி படம் எடுத்த போது அங்கு உதவி செய்து கொண்டு இருந்த ஒருவர் “இவரையும் நடிக்க வைங்களேன்”

என்று சசி குமாரிடம் சொல்ல, சசி குமாரும் என்கிட்டே நடிக்கிறீங்களானேனு கேட்டார். எனக்கு நடிப்பெல்லாம் வராதுன்னு சொன்னேன். அவர் தான் அதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயம் இல்லைனு சொல்லி என்ன நடிக்க வச்சார்.

நா நடிச்ச ஒரே சீனும் நல்லா பேமஸாக ஆகிவிட்டது. இப்போது கூட இன்னமுமே ஊருக்குள்ள யாரவது புதுசா பார்த்தால், ‘ஏய் அந்த ஆளு தாண்டி சுப்ரமணியபுரத்துல தொடுப்பு வீட்டுக்கு போயிட்டு சாக்கடைல விழுந்து எந்திருச்சு வருவாருல்ல’ன்னு கையை காட்டி பேசுவாங்க. ஆரம்பத்துல இப்படி யாராச்சும் சொன்னா கோ பம் வந்துரும்.

அப்பறம் நம்ம நடிப்பதான் அப்படிப் பேசுறாங்கன்னு ஜாலியா எடுத்துக்கிட்டேன்.இந்த படத்துல நடிச்சதுக்கு ஒரே ஒரு வருத்தம் என்னன்னா என் பொண்டாட்டி அந்த சீனை பாத்துட்டு என்கூட ஒரு வாரம் பேசவே இல்ல. எல்லாம் நடிப்புதாம்மானு சமாதானம் பண்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு.தற்போதும் மாட்டுத்தாவனியில்

இலைக்கடை நடத்தி வரும் முருகன் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு மீண்டும் தன் இலை தொழிலை பார்க்க சென்றுவிட்டார். சசி குமார் கூப்பிட்டால் மீண்டும் எல்லாத்தையும் எறகட்டிட்டு கிளம்பிடுவேன் என்று கூறியுள்ளார் மொக்கச்சாமி.

hey