பிக்பாஸ் 5 பாவனிக்கு முத்தம் கொடுத்த சர்ச்சை – அமீருக்கு ரெட் கொடுத்து வெளியேற்றமா? விளாசும் நெட்டிசன்கள்பிக்பாஸ் தமிழில் ஒவ்வொரு சீசனிலும், காதல் மற்றும் கிசுகிசு அரங்கேறும். மற்ற மொழிகளை விட தமிழ் பிக்பாஸில் குறைவு தான். பிக்பாஸ் முதல் சீசனின் போது ஆரவ் மற்றும் ஓவியா காதல் விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது.அதும் அந்த மருத்துவ முத்தம் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகியது. அதேப்போல் இந்த 5-வது சீசனிலும் மீண்டும் ஒரு முத்தக் காட்சி பிக் பாஸ் வீட்டில் நடந்தேறியிருக்கிறது.அவர்கள் யாரும் இல்லை பாவனி மற்றும் அமீர் தான். டிஆர்பியை எகிற வைக்க இவர்கள் பேசும் காட்சிகளையே அதிகமாக காட்டி வருகின்றனர். அதேப்போல் காதல் நாயகனாக வலம் வரவேண்டும் என அமீரும் ஏதாவது பாவனியிடம் கடலை போட்டுக்கொண்டே இருக்கிறார்.

மேலும், என்னை விட சின்ன பையன் நீ என்றும் அமீரின் காதலுக்கு நோ மீன்ஸ் நோ என சொன்ன பிறகும் அமீர் எல்லை மீறி படுக்கையறையில்

பேசிக் கொண்டிருக்கும் போது ரகசியம் சொல்வது போல வந்து பாவனிக்கு முத்தம் கொடுத்தது பிக் பாஸ் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதெல்லாம் அமீர் ட்ரெண்டாக தான் செய்துவருகிறார் என ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.மேலும், கடுப்பான ரசிகர்கள் வைல்ட் கார்ட் மூலம் உள்ளே வந்த அமீரை உடனடியாக ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என வலியுறுத்து வருகின்றனர்.

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

hey