குரு, சனி, ராகு, கேது என ஆட்டிப்படைக்கும் கிரகத்தால் காத்திருக்கும் விபரீத ராஜயோகம்! யாருக்கு கோடி நன்மைமார்கழி மாதம் மகத்துவம் நிறைந்த மாதம் தனுசு ராசியில் குருவின் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம்.பக்தி மார்க்கத்திற்கு வழிகாட்டும் மாதமாக மார்கழியை அனைவரும் கருதுகின்றார்கள்.நவகிரகங்களின் கூட்டணியால் 8 ராசிக்கும் மிக நல்ல பலன் கிடைக்கும். இது குறித்து விரிவாக பார்க்கலாம். தனுசு : புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் புத்தி கூர்மை அதிகரிக்கும் கலைகளில் நிபுணத்துவம் பெறுவீர்கள். குரு மூன்றாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் நல்லுறவு நிலவும், அக்கம் பக்கத்தரின் உதவி கிடைக்கும்.சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பொன் நகைகளை வாங்குவீர்கள். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளின் பணம் கிடைக்கும். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் கோயில்களுக்காக அதிக செலவுகள் செய்வீர்கள்.

மகரம்: செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும் தொழில் லாபம் அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும்.சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும்.

கும்பம்: செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் நிலபுலன் வகையில் நன்மை உண்டாகும்.குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும், சமுதாயத்தில் மரியாதை உயரும்.உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலுக்காக செலவுகள் அதிகரிக்கும், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். ராகு நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் போன்ற அசையா சொத்துகளை வாங்கும் யோகம் உண்டாகும் .

மீனம்: குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளுக்கு மருத்துவச் செலவுக்காக நகைகளை விற்கும் நிலை ஏற்படும்.சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாட்கள் ஆசைகள் நிறைவேறும், தொழில் லாபம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள்.

சிம்மம்: குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத்துணையினால் சந்தோஷம் அதிகரிக்கும் உறவினர்களுடன் நல்லுறவு அதிகரிக்கும்.குரு பார்வையால் திருமண யோகம் கை கூடி வரும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் தொல்லை உண்டாகும், மாத பிற்பகுதியில் கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும்.ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் புதிய கிளை துவங்குவீர்கள் கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும்.

கன்னி: சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும் அரசு ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும், உறவினர்களின் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள்.ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குலதெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள் கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களால் நன்மை உண்டாகும்.

துலாம்: புதன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் எதிர்பார்த்திருந்த தகவல் வந்தடையும்.குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாட்களாக வெளியில் பாக்கியிருந்த பணம் வசூலாகும், கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் இயந்திரத் தொழில் சிறப்படையும், ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் பண வரவு உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் சூடு அதிகரிக்கும் கண் பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை.

விருச்சிகம்: செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் அதிகாரப் பதவி கிடைக்கும் ரியல் எஸ்டேட் தொழிலில் லாபம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் சொத்துக்கள் சேர்க்கை அதிகரிக்கும், படிப்பில் முன்னேற்றம் உண்டாகும்.திடீர் பண வரவு அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உண்டாகும் மன தைரியம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களால் நன்மை உண்டாகும்.கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் கடவுள் பக்தி அதிகரிக்கும்.

hey