அடடே.. இவர் யாரென்று அடையாளம் தெரிகிறதா? இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்சின்னதிரையில் தற்போது பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழில் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி புதுவிதமான நிகழ்ச்சிகளை அறிமுகபடுத்தி வருகிறது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்களிடையே பெருமளவில் பார்க்கப்படுவதோடு டிஆர்பியிலும் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. இந்நிலையில் இதில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர், கலக்கபோவது யாரு,ஜோடி,பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் வெகு பிரபலம்.இருப்பினும் இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி எனும் சமையல் நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சிகளை ஓரம் கட்டும் அளவிற்கு பிரபலமடைந்துள்ளது.

பிரபல டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது, எந்தவித எதிர்மறையான கமெண்டுகளும் இல்லாமல் அனைவரும்

ரசிக்கும்படியான ஒரே நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி ஷோ தான்.எப்போது இதன் அடுத்த சீசனை தொடங்குவார்கள் ்என ஏங்கித் தவிக்கின்றனர் இந்நிகழ்ச்சியின் ரசிகர்கள், அந்தளவுக்கு அமோக ஆதரவை பெற்றிருந்தது.

இதில் நடுவர்களாக வந்த செஃப்தாமுவை யாராலும் அவ்வளவு சீக்கரம் மறக்க முடியாது, செஃப் என்றாலே தாமு தான் என்றளவுக்கு பிரபலமாகி விட்டார்.

இவரது முழுப்பெயர் தாமோதரன் என்பதாகும். Food Supply Department-ல் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றுள்ள செஃப் தாமு பல விருதுகள் மற்றும் 3 கின்னஸ் சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.

இதில் ஒரு தனிநபரின் மிக நீண்ட சமையல் மாரத்தான் போட்டிக்கான கின்னஸ் உலக சாதனையும் ஒன்று. இது தவிர அவர் தனது துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும் பணியாற்றி இருக்கிறார்.

(Hotel Management and Catering Technology) PhD பட்டம் பெற்ற முதல் இந்திய செஃப் ஆவார்.எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் தாமு, தன்னுடைய பழைய போட்டோவை பகிர்ந்திருந்தார், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

hey