காமெடி நடிகர் யோகி பாபுவிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை யாருனு தெரியுமா..? அடேங்கப்பா இவங்களா..?



தமிழ் சினிமாவில் அந்த காலம் தொடங்கி இன்றளவு வரை திரைப்படங்களில் நடிக்கும் ஹீரோ ஹீரோயின்களுக்கு எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமோ அந்த அளவிற்கு அந்த படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடிக்கும் காமெடி நடிகர்களும் பிரபலம் தான். அந்த வகையில் தற்போது பல காமெடி நடிகர்கள் படங்களில் வேற லெவலில் காமெடி காட்சிகளில் நடித்து வருவதோடு பலரது மனதில் நீங்காத இடத்தை பிடித்து வருகிறார்கள். இந்நிலையில் தனது கோணல்மானலான உடல் மற்றும் முக அமைப்பையே தனது பலமாக வைத்து தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் தவிர்க்கமுடியாத காமெடி நடிகராகவும் முன்னணி நகைச்சுவை நடிகராகவும் வலம் வருபவர் பிரபல முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு.

சாதாரண குடும்ப பின்னணியை கொண்ட இவர் ஆரம்பத்தில் பல படங்களில் முகம் தெரியாத சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன் பின் தனது நகைச்சுவை திறனால் மக்களை வெகுவாக கவர்ந்து தற்போது கதாநாயகனாக பல படங்களில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.

மேலும் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் யோகி பாபு அவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்வார் என பலர் கேள்விகளை எழுப்பி வந்த நிலையில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் உறவினர் பெண்ணான மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் யோகி பாபு, இவர் நடிப்பில் தொடர்ந்து ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.கடைசியாக சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடித்திருந்த யோகி பாபுவின் கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது.

இதனை தொடர்ந்து அடுத்த வருடமும் இவர் நடிப்பில் ஏரளமான திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. அதில் பீஸ்ட், வலிமை உள்ளிட்ட திரைப்படங்களும் உண்டு.இந்நிலையில் யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை லட்சுமி மேனன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் முருகேஷ் பூபதி இயக்கும் அப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட நாயகன் மற்றும் நாயகி இருவருக்கும் இடையே ஏற்படும் காதல் குறித்து அப்படத்தில் கூறப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

hey