அட கவுண்டமணி காமெடியில் வரும் அழகுமணியா இது..? பல ஆண்டுகள் கழித்து வெளிவந்த தற்போதைய புகைப்படம்



தென்னிந்திய தமிழ் சினிமாவில் அந்த காலகட்டத்தில் இருந்தும் இந்த காலகட்டம் வரையுலும் சினிமா உலகில் இன்றளவும் காமெடியில் புகழ் பெற்று இருப்பவர்தான் கவுண்டமணி . இவர் திரையில் வந்தாலே சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது . இவருடன் நடிகர் செந்திலும் இணைந்து பண்ணாத சேட்டைகளே இல்லை என்றே சொல்லவேண்டும்.ஒரு சில நடிகர்களின் காமெடியை பார்த்தால் தான் சிரிப்பு ஆனால் இவர்களது காமெடியை கேட்டாலே போதும் வயிறு குலுங்க சிரிக்கலாம். அந்த அளவிற்கு இவர்களது காமெடி திரைப்படங்களில் பலத்த வரவேற்பை பெற்றதோடு இவர்களுக்கு என்றே சினிமா உலகில் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சொல்லபோனால் இவர்களது காமெடியை பிடிக்காதவர்களே இல்லை எனலாம்.

திரைபடங்களில் தற்போது பல காமெடி நடிகர்கள் தனியாக காமெடி செய்து வரும் நிலையில் அந்த காலகட்டத்தில் இருந்து இன்று வரை ஜோடியாக கவுண்டமணியும் செந்திலும் இணைந்து காமெடியில் கலக்கி உள்ளனர். இவ்வாறு நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் தங்களது நகைச்சுவையால் பலத்த வரவேற்பை பெற்றவர்கள்

தற்போது திரைபடங்களில் நடிப்பதை தவிர்த்து வரும் நிலையில் உள்ளனர். காரணம் சமீபகாலமாக உடல்நிலை குறைவு காரணமாக இருக்கும் நிலையில் கவுண்டமணி எந்த மேடை நிகழ்ச்சிகளிலும் சினிமாவிலும் கலந்து கொள்வதில்லை. மேலும் கவுண்டமணியுடன் இணைந்து காமெடியில் கலக்கிய இன்னொரு நடிகர் சத்யராஜ்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் சத்யராஜ் மற்றும் கவுண்டமணி இணைந்து பல படங்களில் நடித்து தங்களது நகைச்சுவையால் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளனர். இப்படி இருக்கையில் இவர்கள் மூவரின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை

அடைந்த திரைபடம் மகுடம் இந்த படத்தில் ஒரு நகைச்சுவை காட்சியில் செந்தில் அவர்கள் நடிகை சரோஜா தேவியின் புகைப்படத்தை காட்டி தனது தங்கையை அழகுமணியை திருமனம் செய்து வைத்து விடுவார். அந்த காட்சியை யாராலும் மறக்க முடியாது அந்த அளவிற்கு இருக்கும் அந்த காட்சி.

அந்த காட்சியில் பருமனாக கருப்பு நிறத்தில் அழகுமணியாக நடித்தவரின் உண்மையான பெயரே அழகுமணி தானாம். அந்த படத்தில் அப்படி நடித்தவரின் உண்மை தோற்றம் அப்படியே நேர்மாதிரி. 43-வயதிலும் இன்னும் அழகாக இருக்கும் அவர் அந்த படத்தில் தன்னை அந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதை யாராலும் நம்ப முடியவில்லை.

இப்படி இருக்கையில் ஆசியராக பணியாற்றி வந்த இவர் அந்த படத்தின் இயக்குனரின் உறவினர் என்ற காரணத்தால் அந்த படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து வேறு எந்த படங்களில் நடிக்காத அவர் தற்போது எந்த ஒரு வேலைக்கு செல்லாமல் வீட்டில் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார். இந்நிலையில் இவரது தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது

hey