லட்சக்கணக்கில் குவியும் லைக்ஸ்! இளநரையுடன் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகரின் மகள்பிரபல நடிகர் திலிப் ஜோஷியின் மகளான நியாதி இளநரையுடன் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பாராட்டுகளை குவித்து வருகிறது.திருமணங்கள் என்றாலே பிரத்யேக அலங்காரங்களுடன் மணமகன்- மணமகள்கள் ஜொலிப்பார்கள், ஆனால் சமீபத்தில் டிரெண்டாகி வரும் திருமணம் ஒன்றில் மணமகள் இளநரையுடன் தோற்றமளிக்கிறார்.அவர் வேறு யாரும் இல்லை, பிரபல நடிகரான திலிப் ஜோஷியின் மகளான நியாதி, சமீபத்தில் கோலாகலமாக திருமணம் நடைபெற தன்னுடைய இளநரையை மறைக்காமல் தோற்றமளிக்கிறார் நியாதி.அதாவது, நீங்கள் நீங்களாகவே இருங்கள், யாருக்காகவும் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டாம் என்ற அறிவுரையை இதன்மூலம் அனைவருக்கும் வழங்கியுள்ளார் நியாதி.

இந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள நடிகர் திலிப் ஜோஷி, இந்த அற்புதமான பயணத்தில் எனது மகள் நியாதி மற்றும் எனது குடும்பத்தில் புதிதாக இணையும் எனது மருமகன் யஷோவர்தன் ஆகியோர் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்!

எங்களுக்கு ஆதரவாக இருப்பதன் மூலம் எங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. திருமண தம்பதியருக்கு நல்வாழ்த்துக்கள்

என பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் வைரலாக, பலரும் நியாதியின் மனதைரியத்தை பாராட்டியிருப்பதுடன் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

hey