நடிகை ஸ்ரீபிரியாவின் மகள் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா? அம்மாவையும் மிஞ்சிய அழகு! சினிமாவுக்கு வருவாரா? தீயாய் பரவும் புகைப்படம்1980-களில் தமிழ் சினிமாவை கலக்கிய நடிகை ஸ்ரீபிரியாவின் மகள் சிநேகாவின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் ஸ்ரீபிரியாவின் மகள் அம்மாவைப் போல சினிமா ஹீரோயினாக நடிக்க வருவாரா என்று எதிர்பார்ப்பை தெரிவித்துள்ளனர். ஸ்ரீபிரியாவைப் போல பார்க்க அழகாக இருக்கும் அவரை பலரும் சினிமாவில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் 1980களில் ஹிரோயினாக களம் இறங்கி கலக்கியவர் நடிகை ஸ்ரீபிரியா. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், செவாலிய சிவாஜி என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த ஸ்ரீபிரியா 1988-ம் ஆண்டு மலையாள நடிகர் ராஜ்குமார் சேதுபதியை திருமணம் செய்துகொண்டார். நாகார்ஜுனா என்ற மகனும் சிநேகா என்ற மகளும் உள்ளனர்.

திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகியிருந்த ஸ்ரீபிரியா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு டிவி சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர், சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

சினிமாவில் ஹிரோயினாக வெற்றிவாகை சூடிய ஸ்ரீபிரியா, நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து, அக்கட்சியின் சார்பில் ஊடகங்களில் அரசியல் விவாதங்களில் பங்கேற்று அனல் பறக்க விவாதித்து வருகிறார்.

ஸ்ரீபிரியா சினிமா துறையில் எப்போதும் கேமிரா வெளிச்சத்தில் இருந்தவர் என்றாலும் தனது குடும்பத்தைப் பற்றியும் மகன், மகள் பற்றி தெரிவிக்காமல் இருந்துவந்தார். 22 ஃபிமேல் கோட்டையம் என்ற மலையாளப் படத்தின் தமிழ் ரீ மேக் படமான மாலினி 22 பாளையங்கோட்டை

படத்தின் பிரஸ் மீட்டின்போது தனது மகள் சிநேகாவை கேமிராக்களுக்கு காட்டினார்.ஸ்ரீபிரியா மகள் சிநேகா, லண்டனில் சட்டம் படித்து முடித்துவிட்டு அங்கேயே வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

சினிமா ஹீரோயின் போல பார்க்க அழகாக இருக்கும் ஸ்ரீபிரியாவின் மகளை சிலர் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வைக்க முயற்சி செய்தனர். ஆனால், ஸ்ரீபிரியா மகளோ வழக்கறிஞராகி வலம் வருவதே தனது லட்சியம் என்று கூறிவிட்டாராம்.

hey