2022 இல் 12 ராசிக்கும் சனி, குருவால் ஏற்பட போகும் அதிரடி மாற்றம்?ஆரம்பமே அட்டகாசமாக இருக்கே…!2022 ஆம் ஆண்டு ஒரு திருப்புமுனையை கொண்டுவரப் போகும் ஆண்டாக இருக்குமா என்பதை அறிய நாம் ஆவலாக இருப்போம்.உங்களுக்கு 2022 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால், 2022 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு ராசி பலன்களைப் படித்துப் பாருங்கள். மேஷம்; ஆண்டின் தொடக்கத்தில் சனி மற்றும் புதனின் சேர்க்கையால் மார்ச் மாதம் வரை சில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.செவ்வாய் மீன ராசிக்கு செல்வதால் மே மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து ஆகஸ்ட் வரை செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பீர்கள். எனவே உணவில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

ரிஷபம்; சனி பத்தாம் வீட்டில் இருப்பதால், பல வருமான ஆதாரங்கள் உருவாகும். ஏப்ரல் மாதத்தில் நடக்கும் பல கிரக பெயர்ச்சிகளால், செல்வமும், பணமும் குவியும்.இருப்பினும், 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் உங்கள் நிதி நிலைமைகளில் பல ஏற்ற தாழ்வுகள் காணப்படும்.

மிதுனம்; 2022 ஆம் ஆண்டு கிரக இயக்கங்களால் மிதுன ராசிக்காரர்களுக்கு பல சவால்கள் மற்றும் வாய்ப்புக்கள் வரும். சனி பகவான் ஜனவரி முதல் மார்ச் வரை 8 ஆவது வீட்டில் இருப்பதால், நிதி இழப்பு மற்றும் பல ஆரோக்கிய பிரச்சனைகள் மற்றும் சவால்களை சந்திக்க நேரிடும். இருப்பினும், ஏப்ரல் 27 ஆம் தேதிக்கு பிறகு சனிபகவான் 9 ஆம் வீட்டில் இருப்பதால், தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் வெற்றிக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்

கடகம்; 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான் 7 ஆவது வீட்டில் இருப்பதால், வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஆனால் குரு 9 ஆம் வீட்டிற்கு சென்ற பின், நிலைமைகள் மேம்படும்.மேஷத்தில் ராகுவின் பெயர்ச்சியானது, பல வேலை வாய்ப்புக்களைத் தரும். இது செப்டம்பர் வரை நல்ல அதிர்ஷ்டத்தை வழங்கும். ஜூன்-ஜூலைக்கு இடையில், செவ்வாய் மேஷத்தில் நுழைவதால், திருமண வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்கும்.

சிம்மம்; 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் 5 ஆம் வீட்டில் இருப்பதால், நிதி நிலைமைகள் மேம்படும். ஏப்ரல் மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெறும்.ஆகஸ்ட் 10 முதல் அக்டோபர் வரை ரிஷப ராசியில் செவ்வாய் இருப்பது அதிர்ஷ்டத்தை வழங்கும்.

கன்னி; பிப்ரவரி 26 ஆம் தேதி செவ்வாய் மகரத்திற்கு செல்வதால், மாணவர்கள் கல்வியில் நம்பிக்கையான முடிவுகளை பெறுவீர்கள். மார்ச் மாதத்தில் சனி, செவ்வாய், புதன் மற்றும் சுக்கிரன் இணைந்திருப்பதால், நிதி நிலைமை சாதகமாக இருக்கும்.புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.

துலாம்; ஜனவரி நடுப்பகுதியில் தனுசு ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் சாதகமான நிதி முடிவுகள் மற்றும் லாபம் உண்டாகும்.மார்ச் மாதத்தில் பல கிரகங்களின் சேர்க்கையால் பொருளாதார வெற்றியும், சீரான பண வரவும் உண்டாகும். மாணவர்கள் கல்வித் துறையில் நம்பிக்கைக்குரிய முடிவுகளைப் பெறுவார்கள்.

விருச்சிகம்; 2022 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் ஏப்ரல் வரை தேவையற்ற செலவுகள் இருக்கும். ஏப்ரல் மாத இறுதியில் சனி கும்ப ராசியில் பெயர்ச்சியாவதால், தொழில், நிதி மற்றும் குடும்ப வாழ்க்கை ஆகியவற்றில் கலவையான முடிவுகளைத் தரும்.ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து நிதி நிலைமைகளில் பெரும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ராகு பெயர்ச்சியால் ஆரோக்கியம் மேம்படும்.

தனுசு; தனுசு ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டு நிதியைப் பொறுத்தவரை சாதகமாக இருக்கும். 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதம் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சியால் நிதி நிலைமை வலுபெறும். மாணவர்களுக்கு 2022 ஆம் அண்டு சாதகமாக இருக்கும். பிப்ரவரி முதல் ஜூன் வரை உங்கள் கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள்.ஆண்டின் தொக்கத்தில் தனுசு ராசிக்கு செவ்வாய் செல்வதால், மனக் கவலைகள் மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டு, குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும்

மகரம்; ஏப்ரல் மாதத்தில் சனி கும்ப ராசிக்கு செல்வதால், ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே செரிமானம் அல்லது வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பீர்கள். எனவே மருத்துவரை தவறாமல் சந்தியுங்கள்.

கும்பம்; 2022 ஆம் ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு பெரும்பாலும் சாதகமாக இருக்கும்.நிதியைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். ஜனவரி மாதத்தில் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சியால், வேலை மற்றும் வணிகம் இரண்டிலும் வெற்றி கிட்டும். இருப்பினும், செப்டம்பர் முதல் நவம்பர் வரை உயர் அதிகாரிகளுடன் சிறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

மீனம்; இந்த ஆண்டின் பெரும்பகுதியில் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் நடக்கும் சனி பெயர்ச்சியால் புதிய வருமானம் கிட்டும்.ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையே கிரக நிலைகள் மாறிக் கொண்டே இருப்பதால், வாழ்க்கையில் பல நிதி ஏற்ற இறக்கங்களைக் காண்பீர்கள். தொழில் ரீதியாக விரும்பிய பலனைப் பெறுவார்கள். இந்த ஆண்டு பதவி உயர்வைப் பெறலாம்.

hey