பெண்கள் கொலுசு அணிவது ஏன் தெரியுமா? அதற்குள் இவ்வளவு சங்கதிகள் இருக்கிறதா?பெண்களுக்கு எப்போதுமே நகை அணிவது விருப்பமான ஒன்று. வெள்ளி, தங்கம் என்று மட்டும் இல்லாமல் வசதி படைத்தவர்கள் பிளாட்டினத்தில் கூட ஆபகரணங்கள் செய்து பொடுவதைப் பார்த்திருப்போம். இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்குச் செய்யும் மிகச்சிறந்த சேமிப்பாகவும் நகைகள் இருக்கிறது.தங்கம், வெள்ளியின் விலை தொடர்ந்து உயிர்ந்து கொண்டே வருகிறது. இப்படியானக் காலக்கட்டத்தில் பெண்கள் இருக்கும் வீடுகளில் இது சிறந்த சேமிப்பு வழியாகவும் இருக்கிறது. அதிலும் வெள்ளியில் பல பெண்களும் கொலுசு அணிவார்கள். அது ஏன் தெரியுமா? வெள்ளி நகைகள் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப்புள்ளிகளைத் தூண்டிவிடும். இதனால் உறுப்புகளின் பராமரிப்புக்கும் இது கைகொடுக்கும்.

அதேபோல் தங்கம், பிளாட்டினம் போன்றவை சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆனால் ஆயுர்வேத மருத்துவப்படி வெள்ளியில் ஒவ்வாமை ஏற்படாது. ஆயுளும் விருத்தி அடையும். நோய்க்கு மருந்தை விட நாம் அணியும் அணிகலன்கள் தடுப்பு மருந்தாகவும் செயல்படும். பெண்களில் சிலர் இன்று தங்கள் ஆடம்பரத்தைக் காட்டுவகையில் கொலுசையும் தங்கத்தில் அணிகிறார்கள். ஆனால் தங்கத்தில் மகாலெட்சுமி இருப்பதால் அதை காலில் அணிவதை பலரும் விரும்புவதில்லை.

இதேபோல் ஆணோ, பெண்ணோ குழந்தை பிறந்ததும் அதன் காலில் கொலுசு மாட்டுவதையும் பார்த்திருக்கிறோம். குழந்தையின் அசைவுகளைத் தெரிந்துகொள்ளவே இப்படி செய்கிறார்கள். பொதுவாகவே ஆண்களை விட பெண்களுக்கு உடல் சூடு அதிகமாக இருக்கும். வெள்ளி பெண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். இதேபோல் பெண்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாக இருப்பார்கள். வெள்ளி கொலுசானது, அவர்களது குதிகால் நரம்பினைத் தொட்டுக் கொண்டு இருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்குச் செல்லும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும். இதனால் தான் அந்த காலம் தொட்டே பெண்களுக்கு கொலுசு அணிவிக்கிறார்கள்.

hey