உங்களுக்கு இந்த இடத்தில் மச்சம் இருந்தால் ராஜ யோகம் தான்.. பணக்கஷ்டமே வராது… உங்களுக்கும் இருக்கான்னு செக் பண்ணுங்க..!பொதுவாகவே சிலருக்கு ஏதாவது அதிர்ஷ்டம் அடித்துவிட்டால், ‘இவனுக்கு எங்கையோ மச்சம் இருக்கு’ என வாயார பெரியவர்கள் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம். உண்மையிலேயே அதிர்ஷ்டத்துக்கும் மச்சத்துக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு.
பொதுவாக இந்து சமய சாஸ்திரப்படி ஒவ்வொரு இடத்தில் இருக்கும் மச்சத்துக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதிலும் சில இடங்களில் மச்சம் இருப்பது அதிர்ஷ்டம். வாருங்கள் அதைக் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

உங்களுக்கு வலது உள்ளங்கையில் இருந்தால் உங்களுக்கும், உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் செல்வமும், வெற்றியும் குவியும். வலது தோள்பட்டையில் மச்சம் இருந்தால் நீங்கள் நிதி மேலாண்மையில் வல்லவர்கள் என்று அர்த்தம். காலில் மச்சம் இருந்தால் நிச்சயம் பணக்காரர்களாக இருப்பார்கள். கூடவே அவர்களுக்கு மற்றவருக்கு உதவும் தாராள குணமும் இருக்கும்.

பொதுவாக வயிற்றில் மச்சம் இருப்பது தீயதாகவே கருதப்படுகிறது. அதேநேரத்தில் அந்த மச்சம் தொப்புளைச் சுற்றி இருந்தால் அவர் வாழ்நாள் முழுமைக்கும் அதிர்ஷ்டசாலியாகவே இருப்பார். முதுகுப் பகுதி மச்சம் அவர் செல்வந்தர் என்பதைக் குறிக்கும். அதேநேரத்தில் இரு புருவங்களுக்கு இடையில் மச்சம் இருந்தால் அவரது மண வாழ்க்கை சிறப்பாக இருப்பதும், அந்த வீட்டிலும் செல்வத்திற்கு எப்போதும் குறை இருக்காது.

hey