தீவு போல் மிதக்கும் பிரமாண்ட கப்பல்.. இணையத்தை கலக்கி வரும் காட்சி..!தீவுகளுக்குச் சென்று கடற்கரையோரம் நின்று கடற்கரையை ரசிப்பது தனி சுகம். இதற்காகவே வெளிநாட்டு பணக்காரர்-கள் பல்வேறு தீவு தேசங்களுக்குச் சென்று பொழுதைக் கழிக்கிறார்-கள். இப்படி இயற்கையை விரும்பும் பணக்காரர்-களைக் குறி வைத்து 2012-ம் ஆண்டில் இறங்கியது இங்கிலாந்தைச் சேர்ந்த ‘யாட் ஐலண்ட் டிசைன் கம்பெனி’.பல கோடி செலவில் ‘ட்ராபிக்கல் ஐலண்ட் பாரடைஸ்’ என்ற மெகா சொகுசுக் கப்பலை உருவாக்கும் பணியை இந்நிறுவனம். இக்கப்பலின் மாதிரி படங்-களை வெளியிட்டபோதே அது மிரட்டல் ரகங்களாக இருந்தன. பார்ப்பதற்கு ஒரு தீவை வடிவமைத்து கடலில் விட்டது போல இருந்தது கப்பல் மாதிரி படங்-கள். 90 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட உள்ள இக்கப்பல், 15 நாட்ஸ் வேகத்தில் பயணிக்கும் திறன் பெற்றிருக்கும்.

இவ்வளவு வசதிகளுடன் உருவாகும் இக்கப்பல் எவ்வளவு ரூபாய் மதிப்பீட்டில் தயாராகிறது என்ற விபரத்தையும், இந்த சொகுசுக் கப்பலில் பயணம் செய்ய எவ்வளவு பணம் செலவாகும் என்ற விபரத்தை இதுவரை அந்நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால், பணக்காரர்-கள் மட்டுமே இதில் பயணிக்க முடியும் என்பது மட்டும் நிதர்சனம்!

hey