இப்படியெல்லாம் மனைவியை தேர்ந்தெடுத்தா உங்க லைப்ல கஷ்டமே இல்லை… இதோ சூப்பர் டிப்ஸ்திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது.

ஒரு ஆணுக்கு, நல்ல மனைவி மட்டும் அமைந்துவிட்டால் அவன் வாழ்க்கை நிறைவாழ்க்கை ஆகிவிடுகிறது. அந்தவகையில் முன்னோர்கள் அதனால் தான் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என சொன்னார்கள். இந்து மதத் தத்துவம் மனைவியை எப்படி தேர்ந்தெடுப்பது என்பதையும் விளக்குகிறது. அதாவது பெண் பார்க்கும்போது பெண்ணின் கருநீல கண்கள் மணாளனைப் பார்த்து நாணும்போதும், அச்சப்படும்போதும் ஆத்மாவின் புனிதத்தன்மை வெளிப்படும். அந்த காதலை உணர்ந்து அந்த பெண்ணை திருமணம் செய்யலாம்.

வெறுமனே ஒரு பெண் அழகாக இருக்கிறார் என்பதற்காகவே திருமணம் செய்வது கொள்வதே பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. மணப்பெண் எப்படி இருக்க வேண்டும் என வடமொழியில் ஒரு சுலோகம் உண்டு. அதன்படி, சேவை செய்கையில் தாசியைப் போலவும், யோசனை சொல்வதில் மந்திரி போலவும், மன்னிப்பதில் பூமாதேவி போலவும், அன்பைக் கொடுப்பதில் அன்னையைப் போலவும், மஞ்சத்தில் கணிகையைப் போலவும் உள்ள பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மனைவி கணவனின் கோபத்தை தணிப்பவளாக இருக்க வேண்டும். அறுசுவை உணவை பரிமாறுவதில் அவள் தாயைப் போல் இருக்கவேண்டும். பொதுவாகவே நல்ல ஒரு பெண்ணைத் திருமணம் செய்துவிட்டால் அவன் முட்டாளாக இருந்தாலும் அறிஞன் ஆகிவிடுவான். அவன் முகமே பிரகாசமாக இருக்கும். அதனால் குணத்தையும், அறிவையும் மட்டும் பாருங்கள். அழகை மட்டுமே முன்னிறுத்தி ஏமாந்துவிடாதீர்கள் ஆண்களே…

hey