இந்த காலத்தில் இப்படியொரு குடும்பமா? இந்த இரு இளம்பெண்களுக்கும் சுத்திப்போடுங்க மக்காகுடும்ப உறவின் மேன்மையை அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். எந்த ஒரு தொழிலையும் தனியாகச் செய்வதை விட குடும்பமாக சேர்ந்தே செய்வது எப்போதும் நிச்சயமாக வெற்றியைப் பெற்றுத்தரும். அதை அப்படியே சாதித்துள்ளது ஒரு குடும்பம்.ஈரோடு சாலையில் இருக்கிறது இமயத்தரசி இட்லி இல்லம். கடை என பெயர் வைக்காமல் இல்லம் என பெயர் வைத்திருப்பதிலேயே இந்த கடையைப் பற்றி உங்களுக்குத் தெரியும். ஆம். இந்த கடையின் உரிமையாளர் பாலசுப்பிரமணியம், அவரது மனைவி, இரு மகள்களோடு சேர்ந்து இந்த உணவகத்தை நடத்திபருகின்றார்.இந்த இட்லிக்கடையை இவர்கள் குடும்பமாக சேர்ந்து நடத்துகிறார்கள். அதிலும் பாலசுப்பிரமணியத்தின் இரு இளம் பெண்களும், கல்லூரியில் படித்துக்கொண்டே இந்த உணவகத்தை நடத்துகிறார்கள்.

அதிலும் மூத்த மகள் சந்தியா பி.காம், சி.ஏ படித்துக்கொண்டு மாலையில் கடைக்கு வருகிறாள். அதேபோல் அவரது தங்கையும் கல்லூரியில் தான் படிக்கிறாள். இந்த குடும்பம் கார சட்னி உள்பட இரண்டு வகை சட்னியோடு சேர்த்து 6 ரூபாய்க்கு கொடுக்கிறார்கள்.இந்த இரு பெண்களும் எந்தவித தயக்கமும் பார்க்காமல் மாவு அரைத்துக் கொடுப்பது முதல் வந்தவர்களுக்கு சாப்பாடு பரிமாறுவது வரை இழுத்துப் போட்டுப் பார்க்கிறார்கள்.

பொதுவாகவே இன்றைய பெண்கள் படித்துவிட்டாலே வீட்டுவேலை செய்யவே கூச்சப்படவும், ஈகோ காட்டவும் செய்ய இந்த காலத்தில் இப்படி இருமகள்களா? என நெட்டிசன்கள் இந்தக் குடும்பத்தைப் பார்த்து ஆச்சர்யத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.இந்த சகோதிரிகளின் தம்பி இட்லிக்கு மாவு அரைக்க உதவுகிறான். குடும்பமே சேர்ந்து இந்த இட்லி இல்லத்தில் உழைப்பைக் கொட்டுகின்றனர். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.

hey