திருமணத்தில் தாலி முக்கிய இடம் பிடித்தது எப்படி தெரியுமா? ஒவ்வொரு தமிழரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்..!திருமணம் என்பது இரு மனங்களை மட்டும் இணைக்கும் வைபோகம் இல்லை. இரு குடும்பங்களையும் இணைக்கும் உன்னத சங்கமம் அது. மனம் ஒத்துப்போய் இரு குடும்பங்கள் இணைவது தான் திருமணம். இந்தத் திருமணங்களில் தாலி முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. இந்துக்களைப் பொறுத்தவரை திருமணத்தில் தாலி கட்டிக்கொள்வதுதான் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதற்காகவே முகூர்த்த நேரம் பார்த்து தாலிக் கட்டிக் கொள்கின்றனர். சங்ககாலத்தில் தாலிகட்டும் கிரியை முறை திருமணம் இல்லை. சங்கம் மருவிய காலத்தில் ‘பொய்யும் வழுவும் முற்றிய பின்னர் அய்யர் வகுத்தது கரணம் என்பர்’ சங்க மறுவிய காலத்தில் கரணம் என்றால் ‘கிரியை’ முறையில் திருமணம்.

ஆனாலும் ஏன் சங்கம் மருவிய காலத்தில் திருமணம் கிரியை முறையில் மக்களைத் திரட்டி அவர்கள் மத்தியில் மேடை போட்டு அக்னி சாட்சியாகத் திருமணம் செய்ய வேண்டியிருந்தது? அதற்கு சங்க காலத்தின் இறுதியில் தூயக்காதல் அசுத்தப்பட்டதேக் காரணம்.

இதை ‘நானும் அவனும் புணர்ந்த காலை குறுக்கு பார்த்திருந்த நான் பொய்ப்பின் நான் எது செய்வேன் யாருமில்லை தானே கள்வன்’ எனச் சொல்கிறது ஒரு ஏழைப்பெண்ணின் குரல்.

இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியுமா? ‘கர்ப்பமாக்கப்பட்ட பெண்ணை, உறவுக்குப் பின்னர் பெண்ணைக் கைகழுவி விடும் போக்கு அதிகரித்தமையை காட்டுகிறது. இது தான் கிரியை முறை திருமணம் தேவைப்படக் காரணம் ஆனது.

சரி திருமணத்தில் தாலி ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது? தாலி என்னும் சொல் தாலிகம் என்ற சொல் மூலத்தில் இருந்து பிறந்தது. தாலிகம் என்ற சொல்லுக்கு பனை மரம் எனப் பொருள். பனை ஓலையில் மணமக்களின் பெயர் எழுதி, என்று திருமணம் என மக்கள் மத்தியில் காட்டுவார்கள்.

இங்கே தாலி பொருளாகு பெயராக உள்ளது. காலப்போக்கில் மனிதச் சிந்தனைகள் தழைத்தோங்கியதும் பனையோலை இன்றைய தங்கமாகத் தாலியாக மாறியது. இதுதான் தாலி பிறந்த கதை!

hey