வீட்டில் வளர்க்கும் நாயை இப்படி கூட பயன்படுத்தலாமா..? இணையத்தில் வைரலாகும் வீடியோபொதுவாக குரங்கு, நாய் போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.பொதுவாக செல்லப்பிராணிகள் வளர்ப்பில் பலரும் நாய் வளர்ப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களும் பிள்ளை போல் வளர்ந்துவிடுவதுதான் இதற்குக் காரணம். இங்கே ஒரு நாய், தன் எஜமானரின் சுட்டிப்பெண் குழந்தை வீட்டுப்பாடம் எழுதும் பணியை கண்காணிக்கிறது. இதுதொடர்பான வீடியோவும் செம வைரல் ஆகிவருகிறது.

சீனாவை சேர்ந்த சூ லியாங் என்பவர் தன் நாய்க்கு இப்படி ஒரு பயிற்சி கொடுத்துள்ளார். அந்த நாயின் பெயர் பாண்டுவான். இந்த நாய் குழந்தை வீட்டுப்பாடம் எழுதும் போது கைகளை மேஜை மீது வைத்துக்கொண்டு நிற்கும். வீட்டுப்பாடம் முடிந்து நோட்டை மூடிவைத்த பின்பு தான் நாய் அந்த இடத்தை விட்டு நகரும்.

‘என் குழந்தையின் சின்ன வயதில் பூனை உணவை எடுத்துச் செல்லாமல் இருக்க பயிற்சி கொடுத்தேன். கொஞ்சம் வளர்ந்ததும் வீட்டுப்பாடம் எழுதாமல் என் மகள் குறும்பு செய்வதைப் பார்த்தேன். அப்போது பாண்டுவானை ஏன் இதை கண்காணிக்க போடக்கூடாது என யோசித்து பயிற்சி கொடுத்தேன்.’’என்கிறார் நாய்க்கு பயிற்சி கொடுத்து தன் மகளை கண்காணிக்க வைக்கும் தந்தை.

என் பக்கத்தில் ஒரு பிரண்ட் இருப்பது போல் உள்ளது. வீட்டுப்பாடம் எழுதும்போது தனிமையில் இல்லாத உணர்வு கிடைக்கிறது என்கிறார் அந்த சுட்டிக்குழந்தை ஸின்யா…நம்மூரில் இன்னும் நாய்களை வீடு, தோட்டக் காவலுக்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். சீனாவில் நடந்த இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகிவருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் நாயை இப்படிக் கூட பயன்படுத்தலாமா என ஆச்சர்யத்தில் மூழ்கிப் போயுள்ளனர்.

hey