63 வயது பாட்டியின் அசத்தல் காணொளி: இந்த வயசுல இப்படியொரு நடனமா?‘Dancing Grandma’ என்று அனைவராலும் பாராட்டப்படும் இந்த 63 வயது பாட்டியின் டான்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.சமீபகாலமாக, வயதானவர்கள் உற்சாகமாக நடனமாடும் பல வைரல் வீடியோக்கள் பரவலாக பார்க்கப்படுகிறது.இங்கு 63 வயது முதியவரான ரவி பாலா ஷர்மாவின் நடனம் தற்போது வைரலாகி வருகின்றது. தற்போது இவரது நடனத்தினை அவதானித்த ரசிகர்கள் பாராட்டு மழையையும், “உங்களிடம் உள்ள மகிழ்ச்சியான குழந்தைத்தனமான சந்தோசம் மற்றவர்களையும் தொற்றிக் கொள்ளும்” என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கொ ரோனா தொற்றுக்காலத்தில், லாக்டவுனின் போது இன்ஸ்டாகிராமில் தனது முதல் வீடியோவை வெளியிட்டார் ரவி பாலா ஷர்மா. இந்திய பாரம்பரிய இசைக்கு அழகாக நடனமாடி பாராட்டுக்களையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.

அப்போதிருந்து, அவர் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் தனது நடனம் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். டான்சிங் பாட்டி என்று அழைக்கப்படும் ரவி பாலா சர்மாவை இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்து 54 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர்!

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

hey