கல்யாணத்துக்கு முன் கணவருக்கு பதிலாக நாயுடன் Photoshoot: இணையத்தை அதிரவைத்த பெண்அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய செல்ல நாயுடன் Pre Wedding Photoshoot நடத்திய சம்பவம் பெரும்பாலான மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.திருமணம் என்றாலே கொண்டாட்டம் தான், அதுவும் இந்த காலத்தில் ஆட்டம், பாட்டம் என களைகட்டும்.இதற்கு முன்பாக Pre Wedding Photoshoot எடுப்பது லேட்டஸ்ட் டிரெண்டாக மாறியுள்ளது, தன்னுடைய வருங்கால துணையுடன் எடுக்கப்படும் இந்த புகைப்படம் வாழ்நாள் நினைவாக மாறிவிடும்.இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், வருங்கால கணவருக்கு பதிலாக நாயுடன் Photoshoot செய்துள்ளார்.அந்த பெண்ணின் பெயர் ஹனா கிம் (Hana Kim), இவரது காதலர் ஜராட் பிரிக்மேன், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளை கவனித்து வந்துள்ளனர்.

இதற்கிடையே தனது செல்ல நாயுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் ஹனா கிம், இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில் ஒரு புகைப்படத்தில், அவரின் செல்ல நாய் கேமராவுக்கு அருகிலும், அதற்கு பின் சற்று

தொலைவில் ஹனா கிம் ஒரு பூங்கொத்தை கையில் ஏந்தியவாறு நிற்கின்றனர்.திருமணத்துக்கு முன்பு அந்த பூங்கொத்தை செல்ல நாய்க்கு கொடுத்து முத்தமழை பொழிந்து நாயின் மீது இருந்த அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

hey