தங்கச்சியின் கல்யாணத்திற்கு அண்ணன் கொடுத்த சப்ரைஸ் என்ன தெரியுமா..? குடும்பமே கண்ணீர் விட்ட நெகிழ்ச்சி சம்பவம்வெளிநாட்டில் இருந்து தங்கள் மகன் எப்போது வருவான் என்கிற எதிர்பார்ப்பு ஒவ்வொரு குடும்ப உறவுகளுக்குமே இருக்கும். இங்கே வெளிநாட்டில் இருந்து மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்பு திரும்பி வந்த வாலிபர் ஒருவர் தன் மொத்தக் குடும்பத்துக்கு கொடுத்த சர்ப்ரைஸை வேற லெவல் என்றே சொல்லிவிடலாம்.அப்படி என்ன செய்தார் என்கிறீர்களா? அதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். வெளிநாட்டு வேலை என்பது என்னதான் கைநிறைய பணத்தைக் கொடுத்தாலும், குடும்ப உறவுகளை பிரிந்து இருக்கும் துயரம் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதது. எப்போது தன் உறவுகளைப் பார்ப்போம் என தவிப்புடனே அவர்களது நாள்கள் நகரும். அதேபோல் குடும்ப உறவுகளுக்கும் தங்கள் வீட்டுப் பிள்ளையை எப்போது பார்ப்போம் என எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்.

இங்கே ஒரு இளைஞர் கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்பு அமெரிக்காவில் இருந்து தாயகம் திரும்பியிருக்கிறார்.அதுவும் தன் தங்கையின் திருமணத்திற்காகவே வந்தார். ஆனால் தான் வந்துவிட்டதை அவர் குடும்பத்தினருக்கு சொல்லாமல் அவர்களை சர்ப்ரைஸ் கடலில் ஆழ்த்த நினைத்தார். இதனால் ரகசியமாக ஒரு அறை எடுத்து தங்கியிருந்தார்.

இந்நிலையில் தன் தங்கையின் திருமண நாளில் திடீர் என கல்யாண மண்டபத்துக்குள் ஆஜர் ஆனார். அவரைப் பார்த்ததும் லீவு இல்லை என வராத அண்ணன் திடீரென தன் கல்யாண மண்டபத்தில் நிற்பதைப் பார்த்து தங்கை அடைந்த சர்ப்ரைஸ்க்கு அளவே இல்லை. அவரது மொத்த குடும்பமும் சர்ப்ரைஸ் ஆன இந்தக் காட்சி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே அதைப் பாருங்கள்.

hey