நடிகர் சிம்புவா இது..? உடல் எடையை குறைத்தவுடன் எப்படி இருக்கிறார் தெரியுமா..? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்80 90 காலகட்டங்களில் இருந்து சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் சிம்பு. பின்பு இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பொதுவாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து வெளியிட்டு வந்தால் மட்டுமே அவர்களது மார்க்கெட் குறையாமல் இருக்கும் என்று பலரும் நினைக்கும் ஒரு உண்மை.ஆனால் சிம்புவின் விஷயத்திலிருந்து இவை முற்றிலும் மாறுபட்ட கருத்தாகும்.சில வருடங்களுக்கு முன்பு கூட சிம்பு எந்த படத்திலும் கமிட் ஆகாமல் வெயிட் போட்டு ஆளே மாறிப் தோற்றமளித்தார்.

இருந்தாலும் அவரது மார்க்கெட் துளி கூட குறையவில்லை. அவருக்கு உடல் எடை ஏறிய நிலையிலும் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். பின்பு கொரோனா காலகட்டத்தில் லாக் டவுனை பயன்படுத்தி உடல் எடையை குறைத்து செம ஸ்மார்ட்டாக மாறியிருந்தார்.

உடல் எடையை குறைத்த பிறகு ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்து மக்களிடையே மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்தப் படம் மக்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை அடுத்து தற்போது மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு போன்ற இரு படங்களில் சிம்பு பிஸியாக நடித்து வந்தார்.இதில் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து தீபாவளி அன்று திரையரங்கில் வெளியிட தயாராக இருந்தது படக்குழு.

ஆனால் டாப் ஹீரோ ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி அன்று வெளிவருவதால் மாநாடு திரைப்படத்தின் வசூல் வேட்டை குறைவடைந்து விடுமோ என்ற எண்ணத்தில் பிறகு வெளியிடலாம் என காத்திருக்கின்றனர்.

தற்பொழுது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் சூட்டிங் மும்பையில் நடைபெற்று வருகிறது. மேலும் சிம்பு லேட்டஸ்ட்டாக ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் சிம்பு ஸ்மாட் ஆக இருக்கிறார் என கமெண்ட் சொல்லி வருகின்றனர்.

hey