தாரை தப்பட்டை படத்தில் நடித்த நடிகையா இது. தற்போது என்ன செய்கிறார் தெரியுமா ?சினிமா உலகில் ஒல்லி, அழகு எல்லாம் தேவையில்லை என்பதை நிரூபித்தவர் நடிகை அக்‌ஷயா. இயக்குனர் பாலா இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த ‘தாரை தப்பட்டை’ என்ற நடிப்பில் அக்‌ஷயா ஆடிய குத்தாட்டத்தை பாராட்டாதவர்கள் யாரும் இல்லை. அந்த படத்திற்கு பிறகு இவருக்கு சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. மேலும், நடிகை அக்ஷயா ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் “யாரடி நீ மோகினி” என்ற சீரியலில் காமெடியன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் சமீபத்தில் நடந்த ஜீ குடும்ப விழாவில் சிறந்த காமெடியன் என்ற விருதை நடிகை அக்ஷயா பெற்றார். அதோடு யாரடி நீ மோகினி என்ற சீரியலில் மக்கள் பலரை சிரிக்க வைத்த அக்ஷயா ரொம்ப நாட்களாகவே சீரியலில் காணவில்லை. என்னாச்சு? ஏன் இவர் சீரியலில் நடிக்கவில்லை? என்று பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார் நடிகை அக்ஷயா.

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். நான் விஸ்காம் படித்து விட்டு நடிக்க வந்து விட்டேன். எனக்கு உயிர், மூச்சு எல்லாமே டான்ஸ் மட்டும் உயிர், ஆரம்பத்தில் எனக்கு ஆடவே வராது.

என் உடம்பு குண்டாக இருக்கும் காரணத்தினால் பல பேர் என்னை கிண்டல், கேலி பண்ணுவார்கள். பல முயற்சிகளுக்குப் பிறகு போராடி தான் நான் நடனம் கற்றுக்கொண்டேன். அதிலும் உனக்கெல்லாம் இது தேவையா?? என்று கூட சொல்லி இருக்கிறார்கள். ஏதாவது ஒரு விஷயத்தில் நான் என்னை நிரூபிக்க வேண்டும் என்று போராடி வந்தேன்.

அப்புறம் தான் பாலா சார் உடைய தாரை தப்பட்டை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நான் போட்ட உழைப்பு வீணாகவில்லை. ஒரு பாட்டுக்கு கரகாட்ட கலைஞர்கள் மாதிரி முழங்காலுக்கு மேல் உடை அணிந்து ஆடும் காட்சி ஒன்று சொன்னார் இயக்குனர்.

நான் அப்ப ரொம்ப பயந்து, கூச்சப்பட்டு நின்று இருந்தேன். ஏனென்றால் என்னுடைய உடலுக்கு அந்த மாதிரி ஆடைகள் போட்டு குத்தாட்டம் ஆடினால் கேலியும் கிண்டலும் செய்வார்கள் குத்தாட்டம் நினைத்தேன்.

உடனே நான் பாலா சாரிடம் போய் முட்டிக்கு மேலே ஆடைகள் போட்டு குத்தாட்டம் ஆடினால் திரையில் பார்க்கிறவர்கள் முகம் சுழிக்கக்கூடாது, ச்சீன்னு சொல்ல கூடாது என்று நான் கேட்டேன். அதற்கு அவர் அதுஎல்லாம் சொல்லாத அளவிற்கு நான் எடுக்கிறேன்

என்று எனக்கு நம்பிக்கையும், ஆறுதலையும் சொன்னார். பிறகு பாலா சார் சொன்ன மாதிரியே செய்து விட்டார். மேலும், அந்தப் பாடலுக்கு நான் ஆடியதை குறித்து நிறைய பேர் என்னை பாராட்டினார்கள். ஒருவர் கூட என் ஆடையை பற்றியும் என்னைப் பற்றியும் விமர்சனம் எழுதவில்லை.

hey