வடிவேலுவுடன் பட படங்களில் காமெடியில் கலக்கிய அம்பானி சங்கரின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா



தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் அம்பானி சங்கர். தற்போது நடிகர் அம்பானி சங்கர் என்ன செய்கிறார்? அவர் மனைவி யார் ? செய்கிறார்? பற்றி தான் பார்க்கப் போகிறோம்… “கடுகு சிறித்தாலும் காரம் குறையாது” என்ற பழமொழிக்கு ஏற்ப நடிகர் அம்பானி சங்கர் தன் வாழ்க்கையில் முன்னேறியவர். நகைச்சுவை நடிகர் அம்பானி சங்கர் அவர்கள் சினிமா உலகில் உயரம் ஒரு தடையில்லை என்பதற்கு உதாரணமாக உள்ளவர். தன்னுடைய கடுமையான உழைப்பினாலும் ,விடாமுயற்சியாலும் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும், அம்பானி சங்கர் தன்னுடைய தனித் துவமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்து உள்ளார். நடிகர் அஜித்தின் ‘ஜீ’ படத்தின் மூலம் தான் அம்பானி சங்கர் அவர்கள் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர்.

நடிகர் கருணாஸ் மற்றும் அம்பானி சங்கர் இணைந்து நடித்த படம் “அம்பாசமுத்திரம் அம்பானி”. மேலும், இவர் அம்பாசமுத்திரம் அம்பானி என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் என்ற ஒரு அடையாளத்தையும் உருவாக்கினார். அந்த படத்திற்கு பிறகு தான் இவரை அனைவரும் அம்பானி சங்கர் என்று அழைத்தார்கள்.

இதை தொடர்ந்து அம்பானி சங்கர் அவர்கள் சிம்புவின் வல்லவன், கருப்பசாமி குத்தகைகாரர், குசேலன் பட்டதாரி, கண்னே கலைமானே, பக்கா, குளேபாகுபாலி, விருந்தாளி, பட்டது யானை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இவர் இதுவரை 35 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.

நடிகர் அம்பானி சங்கர் அவர்கள் 2012 ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி மோனிகா நந்தினி என்ற பட்டதாரி பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய பெண்ணை மதுரை திருமங்கலத்தில் நடந்தது. இவர்கள் திருமணத்திற்கு வடிவேலு, விவேக், கஞ்சா கருப்பு, பெரிய கருப்பு தேவர், சிங்கமுத்து, போண்டாமணி உள்ளிட்ட பல நகைச்சுவை நடிகர்கள் வந்து வாழ்த்தினார்கள்.

அதோடு இவர் அடிக்கடி என்னுடைய ரோல் மாடல் நடிகர் வடிவேலு தான் என்று கூறுவார். அது மட்டும் இல்லாமல் அவரைப் போல சிறந்த காமெடியனாக நடித்து மக்கள் அனைவரையும் சிரிக்க வைக்க வேண்டும். இது தான் என்னுடைய லட்சியம் என்றும் கூறி இருக்கிறார். அம்பானி சங்கர் அவர்கள் நடிப்பை எல்லாம் தாண்டி விளையாட்டிலும் புலி என்று நிரூபித்து விட்டார்.

இவர் நடிப்புக்கு சமமாக விளையாட்டிலும் அதிக ஈடுபாடு உள்ளவர். அந்த வகையில் இவர் ஒரு சிறந்த பாட்மிண்டன் விளையாட்டு வீரர். இவர் சமீபத்தில் நடந்த பாரா வீரர். போட்டியில் கலந்து கொண்டு விளையாடினார். அந்த போட்டியில் தங்கம் வென்று உள்ளார். இவருடைய உயரம் குறைவாக இருந்தாலும்

போட்டியில் கலந்து கொண்டு தன்னம்பிக்கையுடன் விளையாடி தங்கம் வென்று உள்ளார். மேலும், இவர் திரைப்படம் மட்டுமில்லாமல் ஒரு சில சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து உள்ளார். இப்போது இவர் பரிமளா திரையரங்கம், கள்ளச் சிரிப்பழகா, மைக்செட் பாண்டி உட்பட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

hey