நடிகர் வினு சக்கரவர்த்தி சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் என்ன வேலை செய்தார் தெரியுமா..?ஒரு காலகட்டத்தில் சத்யராஜ், விஜயகாந்த், ரஜினிகாந்த், ராமராஜன் ஆகிய நடிகர்களின் படங்களை வெற்றி பெற செய்த பங்கு வினுசக்கரவர்த்திக்கும் உள்ளது. இவர் ஊர் முக்கியஸ்தர்கள் கதாபாத்திரங்களை பெரும்பாலும் ஏற்று நடிப்பார்.சினிமாவில் இவர் வெற்றி அடைவதற்கு இவரது மேனரிசம் தான் காரணம். நாடகம் ஒன்றில் ஒருமுறை எமதர்மராஜா வேடம் போட்டு நடித்து இருக்கின்றார். இதைக்கண்ட அருள் என்பவர் உன்னுடைய நடிப்பு போலீஸ் உருவத்துக்கு ஏற்றவாறு இருக்கிறது என்று கூறியுள்ளார்.தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு பின் சக்கரவர்த்தி உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். சினிமாவில் அவருக்கு ஆர்வம் இருந்ததால்,

காவல்துறை வேலையை விட்டுவிட்டு பின்னர் சினிமாவில் முயற்சி செய்து கொண்டே சென்ட்ரல் கவர்ன்மெண்ட் ரயில்வே துறையில் அவர் பணி செய்து வந்துள்ளார்.

பின்னர் ரயிலில் பயணம் செய்த கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகல் என்பவரை சந்தித்து சினிமா வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ளார். இவருடைய தனித்துவமான நடிப்பு பல ஹிட் படங்களுக்கு காரணமாக அமைந்தது

hey