விஜய் டிவி தொகுப்பாளினி ப்ரியங்காவா இது – ஆரம்ப காலகட்டத்தில் எப்படி இருக்கிறார் பாருங்க …?தற்போதைய காலகட்டத்தில் வெள்ளித்திரையை பொறுத்தமட்டிலும் சின்னத்திரையில் வெளிவரும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுமே மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சின்னத்திரை தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் வரும் நடிகர் நடிகைகளும் மக்களிடையே பெரிதளவில் பிரபலமாக இருப்பதோடு இதன் மூலம் பிரபலமாகி சினிமாவில் பல முன்னணி படங்களில் நடித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடிகர் நடிகைகள் எந்த அளவிற்கு பிரபலமோ அதை காட்டிலும் அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்கள்.

அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எந்த அளவிற்கு மக்களிடையே விரும்பி பார்க்கபடுகிறதோ அதே அளவிற்கு அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் மக்களிடையே பலத்த வரவேற்பையும் புகழையும் பெற்று வருகின்றனர்.

இந்த வகையில் இந்த சேனலில் பல தொகுப்பாளர்கள் பேமஷாக உள்ள நிலையில் இவர்களில் ஒருவராக தனக்கென தனி ஒரு அடையாளத்தோடு பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக வந்தவர் ப்ரியங்கா.இவர் தற்போது சூப்பர் சிங்கர் 8 மற்றும் ஸ்டார்ட் ம்யூசிக் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை முன் நின்று தொகுத்து வழங்கி வருகிறார்.

இதுமட்டுமின்றி விடுமுறை தினத்தன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றும், தொகுத்து வழங்கியும் வருகிறார்.

இந்நிலையில் தொகுப்பாளினி ப்ரியங்காவின், விஜய் டிவிக்கு வந்த புதுசில் எடுத்து புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.இதில் பார்ப்பதற்கு உடல் எடை குறைந்து மெலிந்து போய் இருக்கிறார் ப்ரியங்கா.இதோ அந்த புகைப்படம்..

hey