மோட்டார் சைக்கில் விபத்து: இரு இளைஞர்கள் உயிரிழப்புகிளிநொச்சி A9 வீதி பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி வி பத்தில் இளைஞர்கள் இருவர் உ யிரிழந்துள்ளார்கள் என கிளிநொச்சி காவல்துறை தெரிவித்துள்ளது.பரந்தன் பகுதியில் உள்ள கட்டட உற்பத்தி நிலையத்திற்கு சீமெந்து இறக்கிய பின்னர் பாரவூர்தி வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளை அதே திசையில் வந்த மோட்டார் சைக்கிள் குறித்த பாரவூர்தியின் பின் பக்கத்தில் மோ தியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.இந்நிலையில், விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்துள்ளனர்.

குமாரபுரம் பரந்தன் பிரதேசத்தை சேர்ந்த மகேந்திராசா யூட்பவிஷன் ( வயது-29) என்ற இளைஞனும் கண்டி வீதி பரந்தனை பிரதேசத்தை சேர்ந்த சவுந்தானந்தன் காந்தீபன் ( வயது-34) என்ற இளைஞனும் உ யிரிழந்துள்ளனர்.

உ யிரிழந்தவர்களின் ச டலங்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை பி ரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. வி பத்து தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

hey