வெளிநாடுகளில் தொழில் புரிவோருக்கு விசேட சலுகை காலம் அறிவிப்புவெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாது வெளிநாடுகளில் தொழில் புரிந்து வரும் நபர்கள் தம்மை பதிவு செய்துகொள்ள விசேட சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை இந்த சலுகை காலம் அமுலில் இருக்கும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.பணியகத்தில் பதிவு செய்யாது சட்டத்திற்கு புறம்பான வகையில் வெளிநாடுகளுக்கு சென்று தொழில் புரியும் நபர்கள் மற்றும் பதிவு காலம் முடிவடைந்து அதனை புதுப்பிக்காது தொடர்ந்தும் வெளிநாடுகளில் தொழில் புரியும் நபர்களுக்கு இந்த சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள், தாம் தொழில் புரியும் நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சென்று, செல்லுப்படியான விசா அனுமதி,

தொழில் ஒப்பந்தம் அல்லது நியமனக் கடிதங்களை சமர்ப்பித்து, கட்டணத்தை செலுத்தி பதிவு செய்துக்கொள்ள முடியும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

hey