வவுனியாவிலிருந்து யாழ் வைத்தியசாலைக்கு நோயாளர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த வேனின் சாரதி திடீர் மரணம்…!!வவுனியாவிலிருந்து நோயாளர்களை யாழ். போதனா வைத்தியசாலைக்கு

வவுனியாவிலிருந்து நோயாளர்களை யாழ். போதனா வைத்தியசாலைக்கு வேனில் ஏற்றிச் சென்ற வேனின் சாரதி திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.வவுனியா வீரபுரம் பகுதியை சேர்ந்த 61 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.

வேனில் பயணிகளை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது பூநகரி சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் திடீரென சாரதிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

உடனே அவர் வாகனத்தை வீதியோரமாக நிறுத்தியுள்ளார். பின்னர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.மாரடைப்பு ஏற்பட்டவுடன் வீதியோரமாக வாகனத்தை நிறுத்தியமையால் வாகனத்தில் இருந்தவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

hey