நடிகர் ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய மகன்-மகள் இருக்கிறார்களா?- இதுவரை நாம் பார்த்திராத புகைப்படம்



தமிழ் சினிமா ரசிகைகள் மத்தியில் ஒரு கால கட்டத்தில் கனவு கண்ணனாக வலம் வந்தவர் நடிகர் ஸ்ரீ காந்த.இவர் அந்த கட்டத்தில் பல படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.மேலும் நடிகர் ஸ்ரீகந்த அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான ரோஜா கூட்டம் மூலம் பூமிகா அவர்களுடன் இணைந்து நடித்து அந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.மேலும் இவர் படிப்படியாக பல படங்களில் நடித்து இவர் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தார்.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என அணைத்து மொழி சினிமா துறையிலும் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.மேலும் இவர் சில வருடம் எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை.

இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லையா இல்லை இவர் சினிமா துறையை விட்டு விலகி விட்டாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் இவர் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

தமிழ் சினிமாவில் சாக்லெட் பாய் என நிறைய நடிகர்கள் கொண்டாடப்பட்டார்கள். அதில் ஒருவர் தான் நடிகர் ஸ்ரீகாந்த், ஆரம்பத்தில் ஹிட் படங்கள் கொடுத்து வந்த அவர் பின் கதை தேர்வில் வித்தியாசம் காட்டி வந்தார்.

அவர் நடித்த சில படங்கள் ஓட, ஒருசில வந்த சுவடே தெரியாமல் போய்விட்டது. பின் நடிகர் விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் மக்களின் நியாபகத்திற்கு வந்தார் ஸ்ரீகாந்த்.

இப்போது சில படங்கள் நடித்து வருகிறார், வரும் நாட்களில் அவரது படங்களின் அறிவிப்புகள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.பல பிரபலங்களின் தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன,

நடிகர் ஸ்ரீகாந்த் குடும்ப புகைப்படமும் வெளியாகியுள்ளது.அதைப்பார்த்த ரசிகர்கள் அட நடிகர் ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய மகன், மகள் இருக்கிறார்களா என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

hey