என்னது வீரம் திரைப்படத்தில் நடித்த குட்டி குழந்தையா இது….? அடையாளமே தெரியாமல் இப்படி வளர்ந்துவிட்டார் : வெளிவந்த புகைப்படத்தினை பார்த்து ஆச்சர்யமடைந்த ரசிகர்கள்தென்னிந்திய சினிமாவில் பல நடிகர் நடிகைகள் என்னதான் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் அவர்களை காட்டிலும் அந்த படங்களில் ஒரு சில காட்சிகளில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள் அவர்களை காட்டிலும் மக்கள் மத்தியில் பிரபலமடைகின்றனர். இதற்கு காரணம் அவர்களது வெகுளித்தனமான நடிப்பும் கொஞ்சும் அழகான பேச்சும் மக்கள் மத்தியில் அவர்களை நீங்காத இடத்தை பெற்று தருகிறது. நடிப்பு என்னவென்று தெரியாத வயதிலேயே பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கொண்டிருப்பவர் தான் யுவினா பார்த்தவி.இவர் வேறு யாரும் இல்லை பிரபல இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித்குமார் நடிப்பில் மாபெரும் வெற்றியை அடைந்த வீரம் திரைப்படத்தில் அஜித் அவர்களுடன் நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரம் தான் யுவினா. 12-வயதே ஆன இவர் பல படங்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

முதலில் விளம்பரங்களில் குழந்தையாக நடிக்க ஆரம்பித்த யுவினா தனது நடிப்பு திறமையால் சின்னத்திரை தொடர்களில் நடிக்க துவங்கினார்.

ஏ.வி.எம். பட தயாரிப்பு நிறுவன தயாரிப்பில் வெளியான உறவுக்கு கை கொடுப்போம் தொடரில் அறிமுகமான இவர் இதை தொடர்ந்து பல தொடர்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மதகஜராஜா, அரண்மனை, மஞ்சப்பை, வீரம், கத்தி, சர்கார் போன்ற பல வெற்றி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பெருமைக்குரியவர்.

இந்த சிறு வயதிலேயே தனது நடிப்பால் பல மக்கள் மனதை கவர்ந்த யுவினா இன்னும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் யுவினா தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது.

தற்போது குழந்தையாக இருந்து வளர்ந்து வரும் யுவினா இன்னும் சில வருடங்களில் கதாநாயகியாக வெள்ளித்திரையில் வலம் வர வாய்ப்பு உள்ளதாக அவரது ரசிகர்கள் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் இவரது அம்மாவுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் இதை உறுதிபடுத்தும் வகையில் உள்ளதாக இருப்பதாக உள்ளது.

hey