வவுனியாவில் 20 – 29 வயதுக்குட்பட்ட 21,291 இளைஞர் , யுவதிகள் தடுப்பூசி பெற்றுள்ளனர்.வவுனியா மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கல் நாளிலிருந்து 14.10.2021 வரையான காலப்பகுதியில் 20 தொடக்கம் 29 வயதுக்குட்பட்டவர்களில் 21,291 நபர்கள் முதலாவது கோவிட் -19 தடுப்பூசியினையும் 5,350 நபர்கள் இரண்டாவது தடுப்பூசியினையும் பெற்றுள்ளனர்.

மேலும் வவுனியா மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 83,711 நபர்கள் முதலாவது தடுப்பூசியினையும் 66,489 நபர்கள் இரண்டாவது தடுப்பூசினையும் பெற்றுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் 14.10.2021 வரையான காலப்பகுதியில் 20 – 29 வயதுக்குட்பட்ட 58.70% வீதத்தினர் முதலாவது தவணை கொவிட் 19 தடுப்பூசியையும் 14.25% வீதத்தினர் இரண்டாவது தவணை கொவிட் 19 தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

அத்துடன் மேலும் வடக்கு மாகாணத்தில் முப்பது வயதுக்கு மேற்பட்ட 88.12% வீதத்தினர் முதலாவது தவணை கொவிட் 19 தடுப்பூசிகளையும் 73.69% வீதத்தினர் இரண்டாவது தவணை தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.

hey