வவுனியாவில் வீசிய பலத்த காற்று : தூக்கி வீசப்பட்ட பேரூந்து நிலைய கூரைகள்வவுனியாவில் நேற்று (16.10.2021) மாலை மழையுடன் கூடிய பலத்த காற்றுடனான காலநிலை நீடித்திருந்ததன் காரணமாக வவுனியா பழைய பேரூந்து நிலையத்தின் கூரைகள் காற்றினால் தூக்கி விசப்பட்டிருந்தது.வவுனியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களான காற்றுடன் கூடிய மழை காலநிலை நிலவி வருகின்றது. அந்த வகையில் நேற்று மழை கடும் காற்று வீசியதன் காரணமாக

வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள கட்டிடத்தொகுதியின் கூரைகள் தூக்கி விசப்பட்டிருந்துடன் மேலும் சில கூரைகள் தரையில் வீழ்வது போன்று கழன்று காணப்பட்டது.

இவ் அனர்த்தம் தொடர்பில் வவுனியா வர்த்தக சங்கத்தினர் உடனடியாக நகரசபையினருக்கு தகவல் வழங்கியமையினையடுத்து சனிக்கிழமை விடுமுறை தினத்திலும் ஒய்வில் நின்ற ஊழியர்கள் மக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைந்து செயற்பட்டிருந்தனர்.

நகரசபையினரினால் கழன்று நின்ற கூரைகள் அகற்றப்பட்டதுடன் கீழே கூரைகளும் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

hey